Where is my train

யிலில் பயணிப்பவர்களுக்குக் குறிப்பாகப் புதிய வழியில் பயணிப்பவர்களுக்குத் தேவையான செயலி (App) Where Is My Train.

Where Is My Train

 

ரயிலில் பயணிப்பவர்கள் இறுதி நிறுத்தத்தில் இறங்குபவர்கள் என்றால், எந்தக்கவலையும் இல்லை. Image Credit

ஆனால், நடுவில் இறங்க வேண்டும் என்றால், வரும் நிறுத்தம் எப்போது வரும்? தவற விட்டுவிடுவோமோ என்ற சந்தேகத்துடன் நிம்மதியற்ற நிலையிலேயே இருப்போம்.

இப்பிரச்சனையைத் தீர்க்க Where Is My Train செயலி உதவுகிறது.

பயன்கள் என்ன?

 

  • எந்த நிறுத்தத்தில் உள்ளோம், எங்கே சென்று கொண்டுள்ளோம்.
  • ஒவ்வொரு நிறுத்தத்தையும் ரயில் எப்போது அடையும்.
  • செல்லவேண்டிய நிறுத்தத்துக்கு எவ்வளவு நேரம் ஆகும்.
  • நிறுத்தம் வந்தால், அலாரம்.
  • நிறுத்தம் வருவதற்கு முன்பு எவ்வளவு நிமிடங்கள் முன்பு அலாரம் அடிக்க வேண்டும்.
  • இணையம், GPS இல்லாமலும் பயன்படுத்தலாம் (Cell Tower வழியாக)
  • பேட்டரி பயன்பாடு குறைவு.
  • Lock screen ல் விவரங்களைக் காணலாம்.
  • இவையல்லாது ரயில் புறப்படும் நேரம், PNR தகவல்கள் உட்பட பல்வேறு தகவல்களைப் பெற முடியும்.

செயலி தமிழிலும் உள்ளது.

Android க்குத் தரவிறக்கம் (டவுன்லோடு) செய்ய இங்கே செல்லுங்கள்

இவ்வளவு சிறப்பான செயலி iOS க்கு இல்லையென்பது வருத்தமளிக்கும் செய்தி. இந்தியாவை சார்ந்த பெரும்பாலான செயலிகள் iOS க்கு இருப்பதில்லை.

இச்செயலியை கூகுள் கையப்படுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய கட்டுரைகள்

ரயிலில் ‘Boarding Point’ மாற்றுவது எப்படி?

உள்ளூர் (suburban) ரயில்களில் பயணிப்பவரா?

ரயில் பயணங்கள்

ரயில்வே துறையில் தனியார் சரியா தவறா?

Previous articleSri Satya Varadharaja Perumal Temple – Arumbakkam / ஸ்ரீ சத்யவரதராஜ பெருமாள் கோயில்
Next articleபஜாஜ் அவென்ஜெர் க்ரூஸ் 220 & ஸ்ட்ரீட் 160 பிஎஸ்6 மாடல் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்…!