Madurai updates :😍🔥

  1. மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு மதுரை மற்றும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய su வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.. இங்கு 5 புதிய விமானங்கள்,2 ஹெலிபேட், வாகன நிறுத்துமிடம், பேருந்து வசதிகள் என அனைத்து வசதிகளும் மேம்பட நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது.

  2. மதுரை மக்களின் பெரும் எதிர்பார்ப்பான மதுரை – தேனி பயணிகள் ரயில் சேவை மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் வரும் 26 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.. மேலும் போடி வரை தொடங்கப்பட்டால் மூணார் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பெரிதும் பயன்படும்.

12 ஆண்டுகளுக்குப் பின் மதுரை – தேனி ரயில் சேவை, மே 27 முதல் தொடங்குகிறது..

காலை 8.30க்கு மதுரையில் புறப்பட்டு, வடபழஞ்சி , உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வழியாக
காலை 9.35க்கு தேனி சென்றடையும்.

மாலை 6.15க்கு தேனியில் புறப்பட்டு,
இரவு 7.35க்கு மதுரை வந்தடையும்.

3.பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் காம்ப்ளெக்ஸ் இல் சென்னையில் உள்ளததை போல் அதி நவீன வசதிகளுடன் சினிமா திரையரங்கம் மிக பிரம்மாண்டாமாக வரவுள்ளது.இதற்காக தனியார் நிறுவங்களுடன் ஆலோசனை நடந்து வருகிறது.



Previous articleகணவரை பிரிந்து காதலனோடு சேர்ந்த இளம்பெண்! கைக்கொடுக்காத காதல் வாழ்க்கை.. இருவரும் பலி! என்னாச்சு? | Tirupathur: Woman died in hospital, husband suicide jumping infront of train
Next articleவிஸ்மயா தற்கொலை வழக்கு.. கிரண்குமாருக்கு என்ன தண்டனை?.. இன்று அறிவிக்கிறது கொல்லம் நீதிமன்றம் | Vismaya Suicide case: Kollam Court gives verdict today