Credit Limit

டனட்டை (கிரெடிட் கார்டு) பயன்படுத்துபவர்களின் Credit Limit யை வங்கிகள் குறைத்து வருகிறார்கள். Image Credit

Credit Limit (உச்ச வரம்பு)

வங்கிகள் கடனட்டை பயன்படுத்தும் அனைவருக்கும் துவக்கத்தில் அவரவர் வருமானத்துக்கு ஏற்ப Credit Limit கொடுப்பார்கள்.

பயன்படுத்துவதன் அளவைப் பொறுத்து, உச்சவரம்பு மாற்றியமைக்கப்படும். பெரும்பாலும் உயர்த்தப்படும்.

Credit Limit என்பது ஒரு கடனட்டையை பயன்படுத்தி எவ்வளவு செலவு செய்ய முடியும் என்பதற்கான உச்ச வரம்பு.

எடுத்துக்காட்டுக்கு ஒரு கடனட்டைக்கு உச்சவரம்பு ₹1,00,000 என்று கொடுத்து இருந்தால், ஒரு சுழற்சிக்கு (50 நாட்கள் கணக்கு) அதிகபட்சம் ₹1,00,000 வரை கடனட்டை வழியே செலவு செய்யலாம்.

₹1,00,000 முழுக்கப் பயன்படுத்தலாம் என்றாலும், தொடர்ந்து முழுமையாகப் பயன்படுத்துவது CIBIL மதிப்பெண்ணைப் பாதிக்கச் செய்யும்.

எனவே, அனுமதிக்கப்பட்ட அளவில் 25% செலவு செய்வது நல்லது. 1,00,000 என்றால் 25,000 செலவு செய்வது நல்லது.

மேலும் விவரங்களுக்குக் கிரெடிட் கார்டு பயன்கள் என்ன? கட்டுரையைப் படிக்கலாம்.

குறைக்கப்பட்ட உச்ச வரம்பு

கடந்த ஓரிரு மாதங்களாகக் கடனட்டை உச்சவரம்பை வங்கிகள் குறைத்து வருகின்றன. கிட்டத்தட்ட 10% முதல் 80% வரை குறைத்து வருகின்றன.

எதனால் இப்படிக் குறைக்கிறார்கள் என்பதற்கான சரியான விளக்கம் இல்லை.

கொரோனா காலம் என்பதால், அதிகச் செலவு செய்து வருமானம் இல்லாததால் திரும்பக் கட்ட முடியாமல் போகலாம் என்பதால் இதைச் செய்யலாம்.

சிலர் அதிக உச்ச வரம்பு இருந்தாலும் குறைவாகத் தொடர்ந்து பயன்படுத்துவது.

எடுத்துக்காட்டுக்கு, ₹7,00,000 உச்சவரம்பு இருக்கும் ஆனால், தொடர்ந்து செலவு செய்வது சராசரியாக ₹20,000 என்பதாக இருக்கலாம்.

எனவே, தேவை குறைவு என்பதாலும் உச்சவரம்பைக் குறைப்பதற்கான வாய்ப்புள்ளது.

எனவே, உங்கள் கடனட்டை உச்சவரம்பு குறைக்கப்பட்டுள்ளதா என்பதைப் பரிசோதித்துக்கொள்ளுங்கள்.

தெரியாமல் அதிகம் செலவு செய்து விட்டால், CIBIL மதிப்பெண்ணில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தொடர்ச்சியாக Account Statement பரிசோதிப்பது நல்லது.

தொடர்புடைய கட்டுரைகள்

சிபில் ஸ்கோர் என்றால் என்ன? [FAQ]

கிரெடிட் கார்டு பயன்கள் என்ன?

வீடு நிலம் அடமானம் வைக்கிறீர்களா?

HDFC Credit Card Vs ICICI Credit Card Vs SBI Credit Card எது சிறந்தது?

CRED | Credit Card Management App

UPI பரிவர்த்தனை பரிந்துரைகள் | மிரட்டும் வளர்ச்சி

PhonePe Google Pay Paytm எது சிறந்தது?

Previous articleஅடுத்த முக்கிய புள்ளியும் காலி.. பாஜகவில் ஐக்கியம்? – அண்ணாமலை ஸ்கெட்ச்சுக்கு கிடைத்த பரிசு! | MNM leader Sarath babu quits party, joins BJP
Next articleAnupama Parameswaran – I rebel, therefore I exist. PC @seshu__vardhan…