News
oi-Noorul Ahamed Jahaber Ali
கொல்கத்தா: விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி மத்திய பாஜக அரசு மாநில விவகாரங்களில் தலையிட்டு வருவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மத்திய பாஜக அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். மேற்கு வங்க மாநில பாஜகவினருக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மம்தா பானர்ஜி, பாஜகவுக்கு எதிரான தேசியளவிலான கூட்டணியை நிறுவுவதற்கும் முயற்சித்து வருகிறார்.
சமாஜ்வாடி, திமுக, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து தேசிய அளவிலான கூட்டணியை அமைக்கும் முயற்சிகளையும் அவர் மேற்கொண்டு வந்தார்.
8 ஆண்டு பாஜக ஆட்சி.. இந்திய ஜனநாயகத்தை வலிமையாக மாற்றியுள்ளோம் – ஜப்பானில் பிரதமர் மோடி பெருமிதம்
இந்த நிலையில், மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, “மத்தியில் ஆளும் பாஜக அரசு விசாரணை அமைப்புகளை வைத்து மாநில விவகாரங்களில் தலையிட்டு வருகிறது. நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தையே பாஜக தலைமையிலான ஆட்சி சிதைத்து வருகிறது.
அடோல்ப் ஹிட்லர், ஜோசப் ஸ்டாலின் மற்றும் பெனிடோ முசோலினி ஆகியோரது ஆட்சியை காட்டிலும் பாஜக ஆட்சி மோசமானது. விசாரணை அமைப்புகளுக்கு தன்னாட்சி அதிகாரத்தை மத்திய அரசு வழங்க வேண்டும். அரசியல் தலையீடுகள் இன்றி விசாரணை அமைப்புகளை செயல்பட விட வேண்டும்.” என்றார்.
English summary
BJP government is worst that Hitler, Mussolini’s government – Mamata Banerjee said
Story first published: Monday, May 23, 2022, 23:20 [IST]