Spirtuality

oi-Jeyalakshmi C

Google Oneindia Tamil News

சென்னை: சிலரது வீட்டிற்குள் எப்போதும் சண்டையும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும். சண்டையும் அழுகுரலும் கேட்கும் வீட்டிற்குள் அன்னை மகாலட்சுமி வரமாட்டார் என்பது நம்பிக்கை, அமைதியும் சாந்தமும் நிறைந்த வீட்டில்தான் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். செல்வ வளம் பெருகும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்க சில பரிகாரங்கள் உள்ளன பார்க்கலாம்.

வீட்டில் நடக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு தனி தைரியம் வேண்டும். வீட்டில் இருவர் சண்டை போட்டால் மீதி இருக்கும் நபர்களுக்கு அந்த வீட்டில் இருக்கவே பிடிக்காமல் போய்விடும்.

வெளியில் தான் ஆயிரம் பிரச்சனைகளை சமாளித்தாலும் வீடு என்பது அமைதியாகவும் நிம்மதியைத் தரக்கூடியதாகவம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உண்ணவோ, உறங்கவோ முடியாமல் போய்விடும். ஏன்தான் இந்த வீட்டில் வசிக்கிறோமோ என்று நினைக்கத் தோன்றும்.

மோடியின் அந்த கொள்கை இருக்கு பாருங்க.. பாஜகவில் இணைந்ததற்கு காரணம் சொன்ன கிரேட் காலி மோடியின் அந்த கொள்கை இருக்கு பாருங்க.. பாஜகவில் இணைந்ததற்கு காரணம் சொன்ன கிரேட் காலி

சண்டை சச்சரவு நீங்க பரிகாரம்

சண்டை சச்சரவு நீங்க பரிகாரம்

இப்படி பிரச்சினைகள் இருக்கும் பொழுது தூக்கமும் சரியாக வராமல் போய்விடும். பெற்றோர்களுக்கு இடையே சண்டை நடந்தால் பிள்ளைகளுக்கும் கணவன் மனைவிக்கு இடையே சண்டை நடந்தால் அந்த இருவருக்கும் மன அழுத்தம் என்கிற நோய் வந்துவிடுகிறது. இவற்றை நீடிக்க விட்டால் பெரும் பிரச்சனை தான். இப்படி வீட்டில் நிம்மதி இல்லாமல் இருப்பவர்கள் வெள்ளிக்கிழமையில் ஒரு முக்கியமான பரிகாரத்தை செய்ய வேண்டும்.

தர்ப்பை புல்

தர்ப்பை புல்

தர்பை எல்லா இடங்களிலிலும் வளராது. மிகவும் தூய்மையான இடங்களில்தான் வளரும். தர்பை கதிர்வீச்சினை எதிர்க்கும் சக்தி கொண்ட தாவரமாகும். தர்ப்பை வீட்டில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜிகளை கிரகிக்கும் தன்மை பெற்றுள்ளது. அதனால் தான் இதனை ஹோமங்களில் பயன்படுத்தப்படுகிறது. சண்டை சச்சரவு அதிகம் பிரச்சினைகள் உள்ள வீட்டில் வசிப்பவர்கள் வெள்ளிக்கிழமை அன்று வீட்டின் நடுப்பகுதியில் ஒரு மண் சட்டியில் தர்ப்பை புல்லை எடுத்துக்கொள்ளவும். தர்ப்பை புல் எரிவதற்கு கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மகிழ்ச்சி அதிகரிக்கும்

மகிழ்ச்சி அதிகரிக்கும்

திருஷ்டி நீங்க கல் உப்பும், கடுகும் முக்கியம். வெண் கடுகு கிடைத்தால் இன்னும் விஷேசம். இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து எரியும் நெருப்பில் மிக சிறிய அளவில் போட்டுக் கொள்ளுங்கள். தர்ப்பை உடன் இவைகள் எரியும் பொழுது நம் கண்ணுக்கு தெரியாமல் நம்மை சுற்றியிருக்கும் எதிர்மறை சக்திகள் கிரகிக்கப்பட்டு அழிக்கப்பட்டுவிடும். அதன் பின் வீட்டில் நிச்சயம் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்து இருக்கும். தேவையில்லாத சண்டை, சச்சரவுகள் கண்டிப்பாக வரவே வராது. குழந்தைகளும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.

வேதனை தீர்க்கும் வேப்பிலை தீபம்

வேதனை தீர்க்கும் வேப்பிலை தீபம்

தினமும் மாலை வேளைகளில் சிறிது மஞ்சள் எடுத்து, வீட்டு வாசல் படியின் இரண்டு புறத்திலும் இரண்டு சதுரங்களை வரைந்து கொள்ள வேண்டும். அந்த இரண்டு சதுரங்களிலும் ஒரு வேப்பிலையை வைக்க வேண்டும். வேப்பிலையின் நுனி கிழக்கு அல்லது வடக்கு திசையை பார்த்தவாறு இருப்பது நல்லது. பிறகு அதன் மீது மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை வைத்து, எண்ணெய் ஊற்றி, மஞ்சள் நிற திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும்

நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும்

தினமும் மாலை வேளைகளில் தீபம் ஏற்றி வந்தால் அந்த வீட்டில் இருக்கின்ற எதிர்மறையான சக்திகள் அனைத்தும் விரைவிலேயே நீங்கி நேர்மறையான ஆற்றல்களாக அதிகரிக்கும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கும் மனஸ்தாபங்கள் மறையும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்துவாழும் தம்பதியர்கள் இந்த பரிகாரம் செய்வதால் கூடிய விரைவில் ஒற்றுமையாக வாழ ஆரம்பிப்பார்கள்.

குலதெய்வத்திடம் வேண்டுதல்

குலதெய்வத்திடம் வேண்டுதல்

பூஜை அறையிலும் இவ்வாறு வேப்பிலை கொத்து வைத்து தீபம் ஏற்றலாம். திரியின் நிறம் மஞ்சள் அல்லது சுத்தமான வெள்ளை நிறத்தில் இருப்பது நல்லது. விளக்கு முன்பாக கற்கண்டு அல்லது பேரீச்சம் பழம் வைத்து வழிபட்டால் போதும். வேப்பிலை மீது வைத்து தீபம் ஏற்றிய பின்னர் குடும்பத்தில் எந்த விதமான சண்டை, சச்சரவும் இல்லாமல் இருக்க வேண்டும். வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் நீங்க வேண்டும் என வழிபட வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே சிக்கல்கள் நீங்கி ஒற்றுமை பலப்பட வேண்டும். சந்தோஷமாக வாழ வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு குல தெய்வத்தை வழிபடலாம்.

அமைதிப்பூங்காவாக மாறும்

அமைதிப்பூங்காவாக மாறும்

இது போல ஒவ்வொரு வாரமும் நீங்கள் செய்து பாருங்கள், சில வாரங்களிலேயே உங்களுக்கு நல்ல ஒரு மாற்றம் தெரிய ஆரம்பிக்கும். காரண காரியம் இல்லாமல் தொட்டதற்கெல்லாம் சண்டை வரும் இந்த காலகட்டத்தில் கணவன் மனைவி சண்டை வராமல் இருக்க இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம். வீடு அமைதிப்பூங்காவாக நிச்சயம் மாறும்.

English summary

Remedies for Peaceful life: (சண்டை சச்சரவு நீங்க பரிகாரம்) There is always fighting and noise inside some people’s house. Mother Mahalakshmi’s grace will be available only in a house full of hope, peace and serenity that Mother Mahalakshmi will not come into a house that hears quarrels and rot. Wealth will increase. You may see there are some remedies for family quarrels.Source link

Previous articleசென்னை சேத்துப்பட்டு பக்கம் போறீங்களா?.. அப்ப “டைவர்ட்” ஆகாமல் இதை படிங்க பாஸ்! | Traffic Route diverted in Chetpet, Ashok Pillar and Poonamallee
Next articleமருத்துவமனையில் நடிகர் டி.ராஜேந்தர்- ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பூருக்கு அழைத்து செல்ல முடிவு? | Actor T Rajendar to take to Singapore for treatment?