Chennai
oi-Vishnupriya R
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் விடுதலையில பாரபட்சம் காட்டப்படுகிறது என நளினியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என கோரி அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
15 பேர் படுகொலை – தூத்துக்குடி துப்பாக்கிசூடு.. இன்று 4-ம் ஆண்டு நினைவு அஞ்சலி- பலத்த பாதுகாப்பு
இந்த வழக்கை நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் , பி ஆர் கவாய் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் விசாரணை நடத்தினர். அப்போது பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளது. ஆளுநர் அமைசசரவை முடிவுக்கு எதிராக செல்ல அதிகாரமிலலை.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பின்படி 7 பேர் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவையே முடிவெடுககலாம். அமைச்சரவை முடிவுக்கு எதிராக ஆளுநர் சென்றால் அது கூட்டாட்சி அமைப்பில் மிகப் பெரிய பாதகத்தை ஏற்படுத்திவிடும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

மே 18 ஆம் தேதி தீர்ப்பு
தொடர்ந்து இந்த வவக்கில் மே 18ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்காக சட்டப்பிரிவு 142 ஐ பயன்படுத்தி அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் பேரறிவாளனை போல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் 6 பேரின் விடுதலை குறித்த கேள்வி எழுந்துள்ளது.

ஆயுள் தண்டனை சிறை
இந்த நிலையில் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினிக்கு பரோல் வழங்கப்பட்டது. இவர் தற்போது காட்பாடி பிரம்மபுரம் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். நளினியை சந்திப்பதற்காக அவரது வழக்கறிஞர் புகழேந்தி அவரது வீட்டிற்கு சென்றார்.

காவல் துறை அனுமதி
அப்போது காவல்துறையினர் அவருக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். இதைத் தொடர்ந்து நளினியை பார்க்க வேண்டும் என காவல் துறையிடம் புகழேந்தி வாக்குவாதம் செய்தார். பின்னர் நளினியை சந்திக்க சிறைத் துறைக்கு கடிதம் எழுதி காவலர் மூலம் அனுப்பினார். இதையடுத்து புகழேந்திக்கு அனுமதி கொடுக்கப்பட்டது.

நளினியை சந்தித்த பிறகு
நளினியை சந்தித்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது பேரறிவாளன் விடுதலைக்குப் பிறகு தாங்களும் விடுதலை செய்யப்படுவோம் என நளினி மகிழ்ச்சியாக உள்ளார். விடுதலையில் பாரபட்சம் காட்டப்படுகிறது. 7 பேரில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.

6 பேர் விடுதலை
ஆனால் முருகன் பல முறை உண்ணாவிரதம் இருந்தும் பரோல் வழங்கப்படவில்லை. தமிவக அரசு மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்யும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் பாரபட்சம் என்ற குற்றச்சாட்டு நீங்கும். இவர்கள் விடுதலை குறித்து தமிழக அரசு மூலம் நல்ல முடிவு வரவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது என்றார் புகழேந்தி. 6 பேரின் விடுதலை குறித்து ஊட்டியில் இருந்தபடியே தமிழக அரசு வழக்கறிஞர் உள்ளிட்ட சட்டவல்லுநர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
English summary
Nalini Advocate Pugalendi says that there is partiality in release of 7 tamils. TN government will give good news for other 6 tamils.
Story first published: Sunday, May 22, 2022, 10:09 [IST]