Chennai
oi-Hemavandhana
சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களை ரவுடிகள் போல ஊடகங்கள் சித்தரிப்பதாக தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லியோனி வேதனை தெரிவித்துள்ளார்.
10 ஆண்டுக்கு பிறகு ஆட்சியை பிடித்த திமுக, தற்போது ஓராண்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.. இந்த வெற்றியை தமிழகமெங்கும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
இறந்து போன மூளை.. 5 பேரை காப்பாற்றிய 6 வயது குழந்தை.. நாட்டை உலுக்கிய
அந்தவகையில், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே திமுக அரசின் ஓராண்டு சாதனை குறித்த விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பேச்சாளர்
இதில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி கலந்துகொண்டு அரசின் சாதனை குறித்து உரையாற்றினார்.. பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் சொன்னதாவது: “அவர் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ரவுடிகள் போல செய்தித்தாள் மற்றும் ஊடகங்கள் சித்தரித்து காட்டப்படுகின்றனர்.. தனியார் கல்லூரி பள்ளிகளில் மாணவர்கள் ஒழுக்கம் கட்டுப்பாடும் இருப்பதாக சித்தரித்து காட்டப்படுகிறது..

கவுன்சிலிங்
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் செயல்படாததால் மாணவர்கள் மன அழுத்தத்தில் இருப்பதால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.. அதனை சரிசெய்யும் வகையில் பள்ளி கல்வி மேலாண்மை குழுவினர் மாணவர்களை ஆற்றுதல்படுத்தவும் அவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணவும் ஒவ்வொரு பள்ளியிலும் கவுன்சிலிங் கொடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றம்
மேலும் வரும் கல்வியாண்டில் பாட புத்தகங்கள் எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை.. அடுத்த கல்வியாண்டில் பாடபுத்தகத்தில் முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஒப்புதலுடன் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.. இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பாடநூல்
முன்னதாக, பொறுப்பேற்ற உடனேயே லியோனி ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், “ஒன்றிய அரசு எனும் வார்த்தையை மக்கள் சிறப்பாக பயன்படுத்த துவங்கி விட்டனர். அடுத்து பருவ புத்தகங்கள் அச்சிடும் போதும் மத்திய அரசு என்ற சொல் நீக்கப்பட்டு ஒன்றிய அரசு என்று புத்தகங்களில் அச்சிடப்படும்” என்றும் உறுதி கூறியிருந்தார்.. ஆனால் சில தினங்களுக்கு முன்பு, பள்ளிப் பாடப்புத்தகங்களில் மத்திய அரசு என்ற வார்த்தைக்கு பதில் ஒன்றிய அரசு என இந்த கல்வியாண்டில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என்று லியோனி தெரிவித்திருந்தார்.

ரிவர்ஸ் கியர்
வழக்கமாக ஒவ்வொரு வருஷமும், தேவைக்கு ஏற்ப, பள்ளிப் பாடப்புத்தகங்களில் மாநில அரசுகள் மாற்றங்களை மேற்கொள்ளும்… அப்படித்தான் இந்த வருஷமும், தமிழ்நாடு பாடப்புத்தகங்களில் சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. மேலும், கடந்த ஒரு வருடமாகவே இந்த விவகாரம் இருக்கும்போது, பாடப்புத்தகங்களில் ஏன் அவ்வாறு அச்சடிக்கப்படவில்லை என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ள நிலையில், வரும் கல்வியாண்டில் பாட புத்தகங்கள் எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை என்று லியோனி மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார்.
English summary
leoni says that books will not be replaced from union gov to union of states in chengalpet dmk meeting ஒன்றிய அரசு என்று பாடநூல்களில் அச்சிடப்படாது என்று லியோனி மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளார்
Story first published: Friday, May 20, 2022, 17:21 [IST]