Chennai

oi-Hemavandhana

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவின் கொள்கை பரப்பு செயலாளரும் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத் தலைவருமான திண்டுக்கல் லியோனி மீது ஏகப்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.. அத்துடன் அவரது பதவியையும் பறிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வெடித்துள்ளது.

பொன்னேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் லியோனி பேசியதாவது: “பெண்கள் அரட்டை அடித்துக் கொண்டு வெட்டியாக இருப்பார்கள் என்ற நிலையை மாற்றி பெண்களுக்கு ஓட்டுரிமைவாங்கித் தந்தது நீதிக் கட்சி.

பெண்களுக்கு சொத்துரிமை வாங்கித்தந்தது கலைஞர்.. பெண்களுக்கு அரசியலில் 50% இட ஒதுக்கீடு வழங்கியவர் தமிழக முதல்வர் ஸ்டாலின்… பெண் விடுதலைக்கு பாடிய பாரதியார் பாரதிதாசன் வழியில் ஆட்சி நடத்தி வருபவர் ஸ்டாலின்.

சர்ச்சை பேச்சு.. அந்த அர்த்தத்துல சொல்லல! இது பாஜகவின் மலிவான அரசியல் - திண்டுக்கல் லியோனி விளக்கம் சர்ச்சை பேச்சு.. அந்த அர்த்தத்துல சொல்லல! இது பாஜகவின் மலிவான அரசியல் – திண்டுக்கல் லியோனி விளக்கம்

 லியோனி பேச்சு

லியோனி பேச்சு

செங்கோட்டை அருகே டெல்லியில் அறிவாலயத்தை நிறுவிய தலைவர் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின் கை காட்டுபவரே பிரதமர் ஆவார் என்பதற்கு அதுவே ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், பெண்களுக்கு சம உரிமை என பல சாதனைகளையும் மக்கள் நலத் திட்டங்களையும் வழங்கிக் கொண்டிருப்பது திராவிட மாடல் ஆட்சி… செருப்பைத் தலையில் தூக்கிக் கொண்டு இருந்த சமுதாயத்தை மேயராக்கி வணக்கத்திற்குரிய மாண்புமிகு மேயர் அவர்களே என அழைக்க வைத்து திராவிட புரட்சியை செய்த தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின்” என்று பேசியிருந்தார்.

 திராவிட மாடல்

திராவிட மாடல்

லியோனியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.. தலித் செயல்பாட்டாளர்கள் பலரும் கண்டனங்களையும் விமர்சனங்களையும் லியோனி மீது வைத்து வருகின்றனர்… திமுகவின் கொள்கை பரப்பு செயலாளரும் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத் தலைவருமாக பதவி வகித்து கொண்டிருப்பவர் திண்டுக்கல் ஐ லியோனி… உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதையடுத்து, ஆர்.பிரியா சென்னையின் முதல் தலித் பெண் மேயராக பதவியேற்றுள்ளார்..

 மேயர் பிரியா

மேயர் பிரியா

இவர் சென்னையின் மூன்றாவது பெண் மேயர் ஆவார்.. மேயர் பதவிக்கு பட்டியலினத்துக்காகவே ஒதுக்கப்பட்டதுதான் சென்னை மாநகராட்சி.. இப்படித்தான் இதற்கு முன்பும் வரலாறு இருந்தது. இந்த நடைமுறையை இடையில் வந்து மாற்றியது யார்? இதில் திமுக என்ன புதிதாக சாதனை செய்துவிட்டது? என்பதே பெரும்பாலானோர் எழுப்பி வரும் கேள்வி.

பட்டியலினம்

பட்டியலினம்

அதேசமயம், மேயர் பிரியாவைப் பற்றி பேசுவதாக நினைத்து, ஒட்டுமொத்த பட்டியலினத்தையே சிறுமைப்படுத்தி பேசிவிட்டார் லியோனி என்று அடுத்த பிரச்சனை கிளம்பியது.. சுருக்கமாக சொல்லப்போனால், திமுகவினர் தங்களை தலித்துகளுக்கு ஏராளமான அதிகாரம் தந்த கட்சியாகவே தங்களை காட்ட முயற்சிப்பதாக ஒரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.. லியோனி இப்படி பேசியபோதே, அவர் மீது புகார்கள் எழும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

 புரட்சி பாரதம்

புரட்சி பாரதம்

இந்நிலையில், ஆவடி காவல் ஆணையாளரிடம் புரட்சி பாரதம் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்… அதில் “
சட்டை கழற்றி அல்லையில் வச்சிக்கிட்டு நடந்துபோன சமுதாயம், செருப்பை தூக்கி தலையிலே வைத்துக் கெண்டு போன சமுதாயத்தை வணக்கத்துக்குரிய மேயர் என்று சொல்ல வைத்தது யார்? என பட்டியலின சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசினார்.. இது பட்டியலின சமூக மக்களின் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

 மேயர் பிரியா

மேயர் பிரியா

அறிவுலக மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களால் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசியல் சாசன சட்டத்தின்படி ரிசர்வேசன் அடிப்படையில் பல இடங்களில் பட்டியலின மக்கள் இருபாலரும் மாநகராட்சி மேயர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனை சற்றும் பொறுத்துக் கொள்ள முடியாத திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் ஒட்டு மொத்த பட்டியல் இனத்தை இழிவுபடுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சாதிய வன்முறையினை தூண்டும் வகையிலும் பட்டியல் இன மக்கள் மத்தியில் அமைதியை குலைக்கும் வகையிலும் பொது வெளியில் பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் பேசியுள்ளார்.

 லியோனி சர்ச்சை

லியோனி சர்ச்சை

இதனால் திரு.திண்டுக்கல் ஐ.லியோனி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படியும், இதர சட்டப்பிரிவுகளின் படியும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகார் தரப்பட்டுள்ளது.. அதுமட்டுமல்ல, பட்டியல் இன மக்களை இழிவாக பேசிய லியோனியை பாடநூல் கழக தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்… உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத பட்சத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இது தொடர்பாக கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.

 கைதாவாரா?

கைதாவாரா?

இதேபோல, பாஜகவின் பட்டியல் இன அணியின் மாநில பொதுச் செயலாளர் நாகராஜ், சென்னை கமிஷன அலுவலகத்தில் ஐ லியோனி மீது இன்னொரு புகார் அளித்துள்ளார்… இப்படி லியோனிக்கு நாளுக்கு நாள் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன… அத்துடன், அவரது பதவியையும் பறிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதால், அதுகுறித்து திமுக மேலிடம் என்ன செய்யும் என்பதும் எதிர்பார்ப்பாக கிளம்பி உள்ளது.. பார்ப்போம்..!

ஆதித்தமிழர்

ஆதித்தமிழர்

அதேபோல, ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் சார்பிலும், திண்டுக்கல் லியோனி மீது புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில், செருப்பை தலையில் தூக்கி வைத்தும், சட்டையை கழற்றி அக்குளில் வைத்து சென்ற சமூகத்தை மேயர் ஆக்கியது ஸ்டாலின் என பட்டியலின சமூகத்தை தவறாக சித்தரித்தும், இழிவாகவும், அந்த கூட்டத்தில் பேசியதாக கூறப்படுகிறது. எனவே, பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் திண்டுக்கல் லியோனி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary

why did dindigul i leoni say about mayor priya and bjp, purachi bharatham party complaint on him லியோனி மீது மீண்டும் போலீசில் புகார் தரப்பட்டுள்ளது பரபரப்பை கூட்டி வருகிறதுSource link

Previous article35 ஆண்டு சிறை- சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் சிறு சிறுக கொல்லப்பட்டார்- ராமதாஸ் இரங்கல் | Forest brigand Veerappan’s brother Mathaiyan dies in Salem Jail
Next articleவைகாசி தேய்பிறை பிரதோஷம்..அமாவாசை..சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி | Vaikasi Amavasai devotees are allowed 5 days to go to Sathuragiri hill