(கம்யூனிச வெறுப்பை வளர்த்துக்
கொண்டு வசைபாடுவோர்
, சாதிய முத்திரை குத்துவோர், இனவாத தேசியவாதிகள் இப்பதிவை படிக்காமலேயே ஒதுங்கிக் கொள்ளலாம்)

மக்கள் தங்களின் மிகப் பிரபலமான கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்களை காணும்போது சஞ்சலம் அடைய வாய்ப்புண்டு. ஆனால் இந்த ஆபத்தை சந்திக்க மறுத்தவர்கள் சமூகக் கடமையில் இருந்து தப்பி ஓடவே பார்க்கின்றனர்” – தேவி பிரசாத் சட்டோபாத்யாயா

லிங்க வழிபாடு உள்ளிட்ட இந்துத்துவ (ஆணாதிக்க)
வெறிபிடித்த அரசியலை புரிந்துகொள்ள…

ஆதியில் மனிதர்கள் சுதந்திரமாக, கூட்டுச் சமூகமாக பொருள் ஈட்டி
வாழ்ந்துவந்தனர். (பொருள் என்றால் உணவு உள்ளிட்ட மனிதர்களின் தேவைகள்). அதன்
போக்கில் புரியாத புதிராக இருக்கும் இயற்கையை வணங்கி வந்தனர். அப்போது தாய்க்
கிழவியின் தலைமையில் கூட்டுச் சமூகமாக வாழ்ந்து வந்தனர்.

 

சாதியப் படிநிலைகளோ, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளோ
இருக்கவில்லை. ஆண் பெண் பாகுபாடும் இருக்கவில்லை. இருவரும் இயற்கையோடு உறவாடி
தமக்கான பொருள்களை ஈட்டி வந்தனர்… தேவையின் காரணமாக (பெண்களின் மகப்பேறு
காலத்தில்) மனிதர்களிடையே இயற்கையான ஓர் உழைப்புப் பிரிவினை நிலவியது. பின்னர் தம்
வாழ்க்கைத் தேவைகளுக்காக கண்டுபிடித்த பொருள் உற்பத்தி முறையின் விளைவாக மாற்றங்கள்
ஏற்பட்டன.

 

விவசாயம் உள்ளிட்ட உணவு உற்பத்தி முறையினால்
நாடோடி சமூகங்கள் பல நிரந்தர குடியேற்றத்தில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகள்
தொடங்கின.. இரும்பு உள்ளிட்ட கருவிகளின் கண்டுபிடிப்பு விளைச்சலை
அதிகப்படுத்தியது.

 

போர் என்கிற பெயரில் பிடித்து வந்த அடிமைகளையும்
கொடுமைப்படுத்தி உழைப்பில் ஈடுபடித்தி அதிகாரத்தை
, நில வளங்களைக் கைப்பற்றியவர்கள் அதிக பொருள்
சேர்க்கத் தொடங்கினர். மெல்ல மெல்ல இனக் குழு வாழ்வு
, கூட்டுச்
சமூக வாழ்வு மற்றும் தாய் வழிச் சமூகமும் சிதைந்து (சிதைக்கப்பட்டு) ஆண்
தலைமையிலான ஆணாதிக்க குடும்ப அமைப்பு – அதாவது தனிச் சொத்து சேர்க்கும் குடும்ப
அமைப்பு
, அதனை நிர்வகிக்கும் அரசுருவாக்கம், அதற்கேற்ற பண்பாடு, மதம், காவல்துறை,
இராணுவம் உள்ளிட்ட அதிகார நிறுவங்கள் தோன்றின என்று (மார்க்சிய)
வரலாற்றாய்வாளர்கள் சமூக அமைப்புகளின் பரிணாம வளர்ச்சி மற்றும் பண்பாட்டுருவாக்கம்
குறித்து ஆய்வுகளை முன் வைத்துள்ளார்கள்.

 

உலகெங்கிலும் இவ்வாறே சமூக அமைப்புகள்
பரிணமித்துள்ளன.

 

தாய் தெய்வங்களை பின்னுக்குத் தள்ளி, ஆண் கடவுளர்கள் அதிகாரம்
பெறுகின்றனர். இதுவும் உலக வரலாறு. இந்தியாவில் பார்ப்பனிய ஊடுறுவல் காரணமாக மதம்
,
பண்பாடு, அரசியல் உள்ளிட்ட மக்களின்
ஒழுங்கமைத்துக் கொள்ளும் அமைப்புகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. நிலவிய
நம்பிக்கைகள்
, ஒழுங்கமைத்துக் கொள்ளும் முறைகளில் தங்கள்
நலனுக்கும்
, அரசுகளின் நலனுக்கும் உகந்ததாக இருக்கும்
அம்சங்களை உட்செறித்தும்
, “பிரச்சினைக்குரிய” அம்சங்களை
நீக்கியும்
, நீர்த்துப் போகச் செய்தும் ஒரு சமூக அமைப்பு
உருவானது.

 

அரசுகளின் ஆதரவின்றி இது நடக்கவில்லை என்பதை
உணராமல்
, மதம்
மட்டுமே அனைத்திற்கும் காரணம் என்று வரட்டு நாத்திகவாத கூட்டம் பேசிக்
கொண்டிருக்கும். அதனால் தான் அத்தகைய நாத்திகவாதம்
, வர்க்க
உருவாக்கம் மற்றும் தனியுடைமை தகர்ப்பை முன் வைக்காத சமூக நீதி வாதம் /
சீர்திருத்தவாதம் ஆகியவற்றை விமர்சனத்தோடு அணுக வேண்டும்! போதாமைகளை அடையாளம்
கண்டு பொருளாயத அடிப்படையில் சமூகப் பிரச்சினைகளை அனுக வேண்டும் என்கிற அறிவை
மார்க்சியம் வழங்குகிறது.

 

ஆணாதிக்க சமூக உருவாக்கத்தின் போது தோன்றியதே
லிங்க வழிபாடு என்கிற ஆய்வுகளும் உண்டு! பெண் என்பவள் கீழே
, ஆண் என்பவன் மேலே என்பதன்
குறியீடு என்னும் அளவுக்கு ஆணாதிக்க குறியீடுகளை கட்டுடைத்துள்ளனர்.

தற்போது இந்து மத மீட்பு, பாதுகாப்பு என்கிற பெயரில்
பா.ஜ.க / ஆர்.எஸ்.எஸ் கூட்டணியின் லிங்க அரசியல் உள்ளிட்ட மத அரசியலை
புரிந்துகொள்ள மார்க்சியம் படிக்கவும். அப்போதுதான் காலம் காலமாக கையாளப்பட்ட
தந்திரங்கள் என்ன
, அதை முறியடிக்கும் வழி என்ன என்பது
விளங்கும். இணைய வெளியில் “டிரால்” செய்து கொண்டு “நிறைவடைவதை”க் காட்டிலும்
அவசியமான வழிமுறைகளை கண்டுபிடிக்க இயலும்! குறைந்தபட்சம்
, இந்த
சமூக-அரசியல்-பொருளாதார இயக்கத்தை விளங்கிக் கொண்டு மாற்றத்திற்காக களம் காணும்
கம்யூனிஸ்டுகளின் சித்தாந்தத்தை விளங்கிக் கொள்ள அது உதவும்!…

 

கை கோர்ப்பதா வேண்டாமா என்பதற்கு முன் மாற்றுத்
தரப்பின் “அரசியல்” ஏன்
, எதற்கு,
எப்படி என்றாவது தெரிந்துகொள்ள வேண்டாமா?

 

Previous articleWhere Is My Train | App
Next articleOutfit: @nirali_design_house Photography: @raghul_raghupathy Cinematography: @s…