Chennai
oi-Hemavandhana
சென்னை: ரேஷன் பொருட்கள் குறித்து, பொதுமக்களுக்கு பலன் தரும வகையில், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளர்
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட் பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன..
இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே பல பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரமும் காக்கப்பட்டு வருகின்றன..
ரேஷன் கடைகள் இந்த 4 நாட்களும் இயங்காது.. அதிரடியாக வந்த அறிவிப்பு.. என்ன காரணம்..?

ஆய்வுகள்
மேலும், நியாய விலைக்கடைகள் சரியாக இயங்கி வருகின்றனவா என்ற நேரடி ஆய்வையும் அதிகாரிகள் மூலம் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.. எல்லாவற்றிற்கும் மேலாக, ரேஷன் கடைகள் குறித்த புது புது அறிவிப்புகள் அடிக்கடி வெளியாகி கொண்டே இருக்கிறது.. அந்த அறிவிப்புகள் சட்டசபைகளிலும், சில நேரம் அமைச்சர்களின் பேட்டிகளின் மூலம் வெளியாகிறது.. அந்த வகையில், நியாய விலைக் கடைகளில் கண் கருவிழி சரி பார்க்கும் முறை முன்னோட்டத் திட்டமாக செயல்படுத்தப்படும் என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி புது அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

அமைச்சர் சக்கரபாணி
தற்போது இன்னொரு அறிவிப்பையும் அமைச்சர் வெளியிட்டுள்ளார்.. குடிமைப் பொருள் வழங்கல், குற்றப் புலனாய்வு துறை அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி துவக்க விழாவானது உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் சென்னையில் நடைபெற்றது… இந்த நிகழ்ச்சியின் முடிவல் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி சொன்னதாவது: “தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்து பொது விநியோகத் திட்டத்தில் வழங்கும் அரிசி கடத்தப்படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, முதல்வருக்கு, சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி இருந்தார்.

அதிமுக ஆட்சி
அரிசி கடத்தல் வாகனங்களில் சிக்கியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்… கடந்த 2 வருடங்களைவிடவும், இப்போது அரிசி கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.. அரிசி கடத்தலில் அதிமுக ஆட்சியில் 14 பேர் கைது செய்யப்பட்டனர்… ஆனால், இந்த ஒரே வருடத்தில் 21 பேர் கைதாகி உள்ளனர்.. இதைதவிர, கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற இடங்களில் தடுப்பு காவல் பிரிவு மூலம் கண்காணிக்கப்பட்டு, அரிசி கடத்தல்கள் தடுக்கப்பட்டுள்ளது… இந்த கடத்தலை தடுப்பதற்கு அதிகாரிகள் கடுமையாக பணியாற்றி வருகிறார்கள்.

பயோமெட்ரிக் பயன்பாடுகள்
மேலும், மாநில எல்லைகளில் சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது… அதேபோல, நியாய விலை கடை, குடோன்கள் போன்ற இடங்களில் இருந்து அரிசி கடத்தப்படுவதாகவும், குறிப்பாக, சாக்குப் பைகளில் சீல் வைத்து கடத்தப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.. அது தொடர்பாக தற்போது கண்டறிய திட்டமிட்டுள்ளோம்… பயோமெட்ரிக் பயன்பாட்டில் உள்ளதால் பெரிய அளவுக்கு தவறுகள் நடக்க வாய்ப்பு கிடையாது..

கோதுமை
ரேஷன் கடைகளில் தேவைப்படுகிறவர்கள் மட்டும் அரிசி வாங்குகிறார்கள். கோதுமைக்கு பதில் அரிசி 22 ஆயிரம் டன் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து குடோனுக்கும் கோட் சிஸ்டம் (“code system”) கொண்டு வர இருக்கிறோம்.. இதன் மூலம் அரிசி எங்கு இருந்து கடத்தப்படுகிறது என்று தெரியவரும். பயோமெட்ரிக் முறை கொண்டு வந்ததில் இருந்து என்ன பொருட்கள் வழங்கப்படுகிறது என்பதும் தற்போது தெரிய வருகிறது.

புகார்கள்
அரிசி கடத்தலை தடுக்க அண்டை மாநில அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் இணைந்து பணியாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் முறையால் ரேசன் கடைகளில் தவறுகள் நடப்பது குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் ரேசன் கடைகளில் முறைகேடுகள் நடந்தால், அதுகுறித்து 1967 என்ற எண்ணுக்கும், 1800 425 5901 என்ற எண்ணுக்கும் அழைத்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.. ரேசன் கடைகளில் விரைவில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்டவை பாக்கெட்டுகளில் வழங்கப்படும்” என்றார் அமைச்சர் சக்கரபாணி.

சக்கரபாணி
சமீபத்தில் நடந்த சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசியபோதே, இந்த அறிவிப்பை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டிருந்தார்.. “அஞ்சல் வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகள் இருப்பிடத்திற்கே அனுப்பப்படும்.. ரேஷன் கடைகளில் இனி பாக்கெட் மூலம் அரிசி வழங்கப்படும்” என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது அது நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அதேபோல, ரேஷன் பொருட்களான அரிசி, பருப்பு போன்றவை பாக்கெட்டுகளில் வீடு தேடி வரும் என்று ஏறக்னவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
English summary
Super announcement and rice in pockets no longer in ration shops, says ministers chakrapani ரேஷன் பொருட்கள் கடைகள் குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ளார்
Story first published: Friday, May 27, 2022, 9:49 [IST]