Maruti Suzuki CelerioX BS6 Launched In India; Pricing Starts At Rs 4.90 Lakh

மாருதி சுசூகி நிறுவனம் பிஎஸ்6 விதிகளுக்குப்பட்ட வெர்சன் செலிரோ எக்ஸ் இந்தியாவில் 4.90 லட்சம் ரூபாய் விலையில் விஎக்ஸ்ஐ வகையாகவும், டாப் ரேஞ்ச் வகையான இச்ட்எக்ஸ்ஐ (ஓ) வகைகளின் விலை 5.67 லட்ச ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கிறது. பிஎஸ்4 மாடலுடன் ஒப்பிடும் 2020 மாருதி சுசூகி செலிரோ எக்ஸ் பிஎஸ்6 மாடல்களின் விலை 15 ஆயிரம் ரூபாய் அதிகமான விலையில் கிடைக்கிறது. இந்த கார்கள் VXI, VXI (O), ZXI மற்றும் ZXI (O) வகைகளில் கிடைக்கிறது. தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மாருதி சுசூகி நிறுவனம், தனது புதிய செலிரோ எக்ஸ் காரை வெர்சுவல் முறையில் அறிமுகம் செய்வதாக இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

மாருதி சுசூகி செலிரோ பிஎஸ்6 விலை
செலிரோ VXI ரூ. 4.90 லட்சம்
செலிரோ VXI (O) ரூ. 4.96 லட்சம்
செலிரோ ZXI ரூ. 5.15 லட்சம்
செலிரோ VXI AGS ரூ. 5.33 லட்சம்
செலிரோ VXI (O) AGS ரூ. 5.39 லட்சம்
செலிரோ ZXI (O) ரூ. 5.55 லட்சம்
செலிரோ ZXI AGS ரூ. 5.58 லட்சம்
செலிரோ ZXI (O) AGS ரூ. 5.67 லட்சம்

ஒரே மாதிரியான 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர் இன்ஜின் உடன் மாருதி நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் ஹாட்ச்பேக்களுடன் பிஎஸ்6 விதிக்குட்பட்டதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 66 பிஎச்பி ஆற்றலில் 6000 ஆர்பிஎம்லும், 90 என்எம் டார்க்க்கில் இயங்கும். இந்த இன்ஜின் ஐந்து ஸ்பீட் மெனுவல் கியர்பாக்ச் உடன் இணைக்கப்பட்டிருக்கும். மேலும் இதில் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் ஆப்சனலாக கிடைக்கிறது. இந்த இன்ஜின், ஆட்டோமேட்டிக் மற்றும் மெனுவல் எதுவாக இருந்தாலும், 21.63 kmpl எரிபொருள் செலவிடும் திறன் கொண்டதாக இருக்கும்.

Maruti Suzuki CelerioX BS6

You May Like:புதிய Tata Nexon XZ+ (S) வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்…விலை ரூ.10.10 லட்சம்…!

வெளிப்புறமாக பார்க்கும் போது, செலிரோ எக்ஸ் மாடல்கள் இதற்கு முந்தைய மாடலை போலவே இருக்கும். இதில் ஒவ்வொரு பக்கமும், ஸ்போர்ட்ஸ் பிளாக் கிளேடிங் அனைத்து புறங்களிலும் இருக்கும். பியானோ பிளாக் ஹனிகோம் மெஸ் கிரில் மற்றும் சாங்கி பனிக்கால விளக்குகள் ஹோசிங்க்களுடன் கிடைக்கிறது. மேலும் இந்த கார் ஒரே மாதிரியான 14 இன்ச் அலாய் வீல்களுடன் இயங்குகிறது. இந்த வீல் கிளாஸ் பிளாக் பினிஸ்டுகளுடன் இருக்கும். இந்த காரின் கேபின் முந்தைய மாடலை போலவே இருக்கிறது. இவை முழுமையான பிளாக் கலர் தீமில் இருப்பதுடன் சில்வர் ஹைலைட்களுடன் நான்கு டோர் பவர் விண்டோகள், மெனுவல் ஹெச்விஏசி, எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் மற்றும் மல்டி இன்பர்மேஷ்ன் டிஸ்பிளே பொன்றவைகளும் இதில் இடம் பெற்றுள்ளது.

Maruti Suzuki CelerioX BS6 Launch

You May Like:ரூ.9.30 லட்சம் ஆரம்ப விலையில் புதிய 2020 Hyundai Verna கார் விற்பனைக்கு அறிமுகம்..!

இருந்தபோதிலும், இந்த கார்கள் மாருதி நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், புதிய 7.0 இன்ச் ஸ்மார்ட்பிளே 2.0 இன்போடெயின்மெண்ட் சிஸ்டம்களுடன் கிடைக்கிறது. இந்த அம்சங்கள் ஏற்கனவே என்ட்ரி-லெவல் எஸ்-பிரஸ்ஸோ மாடல்களில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் டூயல் ஏர்பேக்ஸ், ஆண்டி லாக் சிஸ்டம்களுடன் எல்க்ட்ரானிக் பிரேக் போர்ஸ் டிஸ்டர்பியூசன், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், சீட் பெல்ட் வார்னிங் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் வழக்கம் போலவே இடம் பெற்றிருக்கும்.

Previous articleரூ.6.39 லட்சத்தில் 2022 டொயோட்டா கிளான்ஸா விற்பனைக்கு வந்தது
Next articleHarley Davidson Low Rider S