Harley-Davidson Low Rider S Prices Starts At Rs 14.69 Lakh
ஹார்லி – டேவிடசன் இந்தியா நிறுவனம், 2020 ஹார்லி டேவிட்சன் லோ ரைடர் மற்றும் 2020 ஹார்லி- டேவிட்சன் லோ ரைடர் எஸ் மாடல்களை வேறுபட்ட இன்ஜின் ஆப்ஷன்களுடன் அறிமுகம் செய்துள்ளது. ஹெச்-டி லோ ரைடரின் விலை 13.75 லட்சம் ரூபாயாகவும், இதுவே ஹெச் -டி லோ ரைடர் எஸ் மாடல்கள் 14.69 லட்ச ரூபாய் விலையில் கிடைக்கிறது. (அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோ ரூம் விலையாகும்)
2020 லோ ரைடர்கள், முந்தைய மாடலை போலவே ஒரே மாதிரியான ஸ்டைல்களுடன் இருக்கும். மேலும், இவை 1970-ஆம் ஆண்டுகளில் வெளியான துரோபேக் குரூஸ்ர் டிசைன்களால் கவரப்பட்டு உருவாக்கப்பட்டடுள்ளது.
மேலும், இதில் முழுமையாக டேங்க் மவுண்டட், டூயல் இன்ஸ்டுரூமெண்ட் கேஜ்கள், ஹெட்லைட் விசனர், ஓல்ட் ஸ்கூல் மாடலால் கவரப்பட்டு பாடி கிராபிக்ஸ் மற்றும் குரோம் எக்ஸ் ஹாஸ்ட்களும் இடம் பெற்றுள்ளது.
You May Like:ரூ.4.9 லட்சத்தில் BS6 Maruti Suzuki CelerioX கார் விற்பனைக்கு அறிமுகம்..!
ஹார்லி-டேவிட்சன் லோ ரைடர் பைக்கள் 1,745 cc வி- டூவின் மில்வாக்கி 107 இன்ஜின் மூலம் இயங்குவதுடன் 14 Nm பீக் டார்க்கில் 3,000 rpm-ல் இயங்கும். டிரான்ஸ்மிஷனை பொருத்தவரை, இதில் 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பிரேம் கிளாசிக் சாஃப்ட் டெயில் லைன்கள் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தபோதிலும், இதன் லைட் வெயிட் டிசைன் பொருத்தமான ரைடுக்கு உதவும். மேலும், இதில் அதிக திறன், கேட்டரிஜ் போர்க் போன்றவை லீனியர் டம்பிங் கேரக்டர்களை கொண்டதாக இருக்கும். இத்துடன் எளிதாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளக் கூடிய மோனோ ஷாக் சஸ்பென்ஷன் பின்புற சஸ்பென்ஷனுக்காக பொருத்தப்பட்டிருக்கும். பிரேக்கை பொறுத்தவரை, நான்கு பிஸ்டன் பிக்ஸ்டு கிளிப்பர்கள் முன்புறத்திலும், சிங்கிள் டிஸ்க் பின்புறத்திலும் பொருத்தப் பட்டுள்ளது.
You May Like:புதிய Tata Nexon XZ+ (S) வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்…விலை ரூ.10.10 லட்சம்…!
ஹார்லி-டேவிட்சன் லோ ரைடர் எஸ் மாடல்கள் பிளாக் அவுட் வெர்சன்களை ஹார்லி -டேவிட்சன் ‘திறமையான குரூஸ்’ மற்றும் குறைக்கப்பட்ட பிரேம்களுடன் இருக்கும் என்று அழைக்கிறது. மேலும் இதில் இன்வெர்ட்டட் முன்புற சஸ்பென்சன், லேசாக உயர்த்தப்பட்ட ஹெண்டில்பார் மற்றும் காஸ்ட் அலுமினியம் ஆகியவைகளும் இடம் பெற்றுள்ளது.
லோ ரைடர் எஸ் மாடல்கள் மில்வாக்கி- எய்ட் 114, 1,745 சிசி வி-டுவின் இன்ஜின்களுடன் அதிக பன்ச், அதிக டார்க், ஆகியவற்றுடன் 145 என்எம் டார்க்கில் 3,000 ஆர்பிஎம்-லும் 87 பிஎச்பி ஆற்றலில் 5,020 ஆர்பிஎம்-லும் இயங்கும். லோ ரைடர் எஸ் மாடகளின் எடை 287 கிலோகிராமாக இருப்பதுடன் இவை 14.69 லட்ச ரூபாயில் விற்பனைக்கு வந்துள்ளது (எக்ஸ் ஷோ ரூம் விலை).