BS6 Bajaj Avenger Cruise 220 & Street 160 Launched In India
பஜாஜ் ஆட்டோ நிறுவனம், பிஎஸ்6 வெர்சன் மோட்டார் சைக்கிள்களான பஜாஜ் டோமினார் 400 பைக்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பிஎஸ்6 விதிக்குட்பட்ட இந்த மோட்டார் சைக்கிள்கள் 1.91 லட்சம் ரூபாய் விலையில் கிடைக்கிறது. பிஎஸ்6 வெர்சன் மோட்டார் சைக்கிள்களின் விலையை பிஎஸ்4 மாடலுடன் ஒப்பிடும் போது ஆயிரத்து 749 ரூபாய் அதிக விலை கொண்டதாக இருக்கும். பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400 மோட்டார் சைக்கிள்கள், பிஎஸ்4 மாடலை போலவே இருக்கும். இந்த பைக்கின் மொத்த அளவுகள் மற்றும் ஸ்டைல்கள் முந்தைய மாடலை போலவே இருக்கும். பஜாஜ் டோமினார் 400 பிஎஸ்6 மாடல்கள், வெய்ன் பிளாக் மற்றும் அயுரா கிரீன் ஆகிய இரண்டு கலர்களில் கிடைக்கிறது.
You May Like:ரூ. 14.69 லட்சம் விலையில் 2020 Harley-Davidson Low Rider S பைக் இந்தியாவில் அறிமுகம்..!
இந்த மோட்டார் சைக்கிள்கள் பிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்டதாக இருப்பதுடன், 373.3 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்யுட்-கூல்டு, எரிபொருள் இன்ஜெக்டட்ட் இன்ஜின்களுடம் லேசாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் DOHC செட் அப்களுடன் நிறுவனத்தின் டிரிபிள் ஸ்பார்க டெக்னாலஜிகளுடன் கிடைக்கிறது. இந்த இன்ஜின் 39.4 பிஎச்பி ஆற்றலில் 8,800 ஆர்பிஎம்-லும், பீக் டார்கான 34 என் எம்-ல் 7,000 ஆர்பிஎம்-லும் இயங்கும். இந்த அளவு பிஎஸ்4 மாடலில் உள்ளதை இருக்கும். இந்த பைக்கில் இடம் பெற்றுள்ள கியர்பாக்சிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது 6 ஸ்பீடு யுனிட்களுடன் சிலிப்பர் கிளட்ச் உடன் இணைகப்பட்டிருக்கும்.
You May Like:பஜாஜ் அவென்ஜெர் க்ரூஸ் 220 & ஸ்ட்ரீட் 160 பிஎஸ்6 மாடல் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்…!
அம்சங்களை பார்க்கும் போது, புதிய பஜாஜ் டோமினார் 400 பிஎஸ்6 மாடல்களில், இதற்கு முந்தைய மாடலில் உள்ளது போலவே இருக்கும். இந்த பைக்கள் முழு எல்இடி லைட்களுடன், முழுமையான டிஜிட்டல் பிரைமரி மற்றும் செக்ண்டரி இன்ஸ்டுரூமெண்ட் கிளஸ்டர்கள், 13 லிட்டர் பெட்ரோல் டேங்க், டூவின் பேரல் எக்ஸ்ஹாஸ்ட், சிங்கிள் சிலிண்டர் ஹெண்டில் அபர், டைமண்ட் கட் அலாய் வீல்கள், உயர் தரம் கொண்ட ரியர்வியூ மிரர்கள், ஸ்பிலிட் சீட்கள், ஸ்பிலிட் ரியர் கிராப் ரெயில் மற்றும் பெட்ரோல் டேங்கில் 3டி லோகோ மற்றும் ரியர் கவுல் ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளது.
You May Like:புதிய Bajaj Pulsar RS200 BS6 பைக் விற்பனைக்கு அறிமுகம்… விலை ரூ.1.45 லட்சம்…!
சஸ்பென்சனை பொருத்தவரை, இந்த மோட்டார் சைக்கிள்களில், 43 மிமி யுஎஸ்டி போர்க்கள் மேல் முன்புறத்திலும், மல்டி செட் அட்ஜெஸ்ட்பிள் மோனோ ஷாக்-கள் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் பெரியளவிலான 320 மிமி முன்புற டிஸ்க் பிரேக் மற்றும் 230 மிமி ரியர் டிஸ்க் பிரேக்களும் பொருத்தப்பட்டுள்ளது. இவை டூயல்-சேனல் ஏபிஎஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளதால், சிறந்த பிரேக்கிங் திறனை கொடுக்கும்.
You May Like:ரூ.1.03 லட்சம் ஆரம்ப விலையில் புதிய BS6 Bajaj Pulsar NS160 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!
புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்களுககான புக்கிங்கை சில டீலர்கள் தொடங்கி விட்டனர். இந்த பைக்கை முன்பதிவு செய்ய 5,000 ரூபாய் டோக்கன் அட்வான்ஸ் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன் முதலில் இந்த பைக்கள், 2016-ஆம் ஆண்டு, 1.06 லட்சம் ரூபாய் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனாலும், இன்றும் வரை சில விலை உயர்வுகளுடன் விற்பனையாகி வருகிறது.