Hyderabad
oi-Nantha Kumar R
ஐதராபாத்: ஞானவாபி மசூதி சர்ச்சைக்கு மத்தியில் ராமராஜ்ஜியம் உருவானால் உருதுமொழி முற்றிலும் தடை செய்யப்படும் என தெலுங்கான மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் பேசினார்.
தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மக்களவை தொகுதி எம்பியாக இருப்பவர் பண்டி சஞ்சய் குமார். இவர் தெலுங்கானா மாநில பாஜக தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று கரீம் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பண்டி சஞ்ய்குமார் பேசினார். அப்போது அவர் ராமராஜ்ஜியம் பற்றி பேசியதோடு, ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசியை கடுமையாக தாக்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில் பண்டி சஞ்ய்குமார் பேசியதாவது:
ஞானவாபி மசூதி விவகாரம்.. நீதிமன்றம் சென்ற முஸ்லீம் அமைப்பினர்! இன்று வாரணாசி கோர்டில் விசாரணை

ராமராஜ்ஜியம் வந்தால் உருதுக்கு தடை
நாட்டில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு மதரசாக்களே காரணம். பயங்கரவாதிகளின் பயிற்சி மையமாக மதரசாக்கள் மாறியுள்ளன. இதனால் விரும்பத்தகாத செயல்கள் நடக்கின்றன. இதனால் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மதரசாக்களே அடையாளம் கண்டு களையெடுக்க வேண்டும். ராம ராஜ்ஜியம் வந்தால் உருது மொழியை முற்றிலும் தடை செய்வோம்.

மசூதிகளை தோண்டி ஆய்வு
மசூதி வளாகங்களை தோண்டி பார்த்தால் சிவலிங்கங்கள் தான் இருக்கின்றன. இதனால் மாநிலத்தில் உள்ள அனைத்து மசூதிகளையும் தோண்டி ஆய்வு செய்ய வேண்டும். மேலும் ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைசிக்கு நான் ஒரு சவால் விடுக்கிறேன். மசூதிகளை தோண்டி பார்ப்போம் அதில் உடல்கள் இருந்தா் நீங்கள் வைத்து கொள்ளுங்கள். சிவலிங்கம் இருந்தால் எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள். இதற்கு நீங்கள் தயாரா?” என கூறினார்.

ஞானவாபி வழக்கு
முன்னதாக உத்தர பிரதேச மாநிலம் ஞானவாபி மசூதியில் இந்து தெய்வங்களை வழிப்பட 5 பெண்கள் அனுமதிகோரி வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆய்வுக்கு உத்தரவிட்டது. இந்த ஆய்வின்போது மசூதி வளாகத்தில் சிவலிங்கம் இருப்பதாக தகவல்கள் பரவின. இதனை குறிப்பிட்டு தான் பண்டி சஞ்சய் குமார் இப்படி பேசியுள்ளார்.

குதுப்மினார் சர்ச்சை
மேலும் டெல்லி குதுப்மினார் கோபுரம் புராதான சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த கோபுரத்தை குத்புதீன் ஐபக் கட்டவில்லை. இந்து மன்னர் விக்ரமாதித்யா கட்டினார் என சமீபத்தில் இந்திய தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற தரம்வீர் சர்மா புதிய சர்ச்சையை கிளப்பினார். மேலும் புராதன சின்னமாக உள்ள டெல்லி குதுப்மினார் கோபுரத்தின் வளாகத்தில் இந்து கோவில் அடையாளங்கள் உள்ளதால் அதனை தோண்டி ஆய்வு செய்ய வேண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் குதுப்மினார் கோபுரத்தை தோண்டி ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லை. தற்போதைய நிலையே அங்கு தொடர வேண்டும் என நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
English summary
Amid of gyanvavi controversy, If Rama Rajya Comes we will completely ban urdu, says telangana BJP Chief and karim nagar MP Bandi Sanjay Kumar