Chennai
oi-Vignesh Selvaraj
சென்னை : சென்னையில் பா.ஜ.க பிரமுகர் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
சிறை என்பது குற்றவாளிகளை ஊக்குவிக்கும் யுனிவர்சிட்டியாக மாறியுள்ளது என்றும் குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் சாதாரண மக்களின் மனதில் பெரும் அச்சத்தை உருவாக்கி உள்ளது. 19 நாட்களில் 20 கொலை நடந்துள்ளது. உளவுத்துறை செயலிழந்து விட்டது என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
“அடுத்த 3 மாசத்துக்கான ஸ்கெட்ச் அண்ணாமலை கையில இருக்கு”- அடேயப்பா.. அவங்களை இறக்குறது இதுக்குத்தானா?
–>

கம்பீரத்தை இழந்த போலீஸ்
இன்று சென்னையில் மாநகர காவல் ஆணையரை சந்தித்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “காவல்துறை தனது கண்ணியத்தை, கம்பீரத்தை இழந்திருக்கிறது. காவல்துறை சுதந்திரமாக சட்டம் ஒழுங்கை கையில் எடுத்து செயல்பட வேண்டும். அரசியல் தலையீடுகளால் தமிழ்நாடு காவல்துறையின் மதிப்பு கெட்டுள்ளது. அதன் வெளிப்பாடுதான் பட்டப்பகலில் நடந்து போகும்போது வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாகவே குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
–>

ரௌடிகளை அடக்கவேண்டும்
பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். அவர் உயிருக்குப் போராடும் காட்சி வாட்ஸ்-அப்பில் பரவுகிறது. இதெல்லாம் சமீபகாலமாகவே அதிகமாக நடந்து வருகிறது. முதல்வர் ரௌடிகளை அடக்கி வைக்க வேண்டும். உள்துறை முதல்வரின் நேரடி கண்காணிப்பில் உள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு என்பது முதன்மையானது. அதற்குப் பிறகுதான் மற்றதெல்லாம்.
–>

போதைப்பொருள் கலாச்சாரம்
சென்னையில் போதைப் பொருள் கலாச்சாரம் அதிகமாக பரவி இருக்கிறது. அதனால் குற்றச் சம்பவங்களும் அதிகமாக நிகழ்கின்றன. நேற்றைய சம்பவமும் அதற்கு உதாரணம்தான். பாஜக பிரமுகரை கொலை செய்தவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். திட்டமிட்டவர்கள், செய்தவர்கள் என உண்மையான குற்றவாளிகள் அத்தனை பேரையும் கைது செய்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
–>

முதல்வரின் கட்சிப் பிடி
தலைநகரான சென்னையில் பட்டப்பகலில் கூலிப்படையினரால் நடக்கும் கொலைச் சம்பவங்கள் சென்னை உலகளவில் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இப்போதாவது காவல்துறை விழித்துக்கொள்ள வேண்டும். இப்போதாவது முதல்வர் கட்சிப் பிடியில் இருந்து காவல்துறையை விடுவிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. அதைச் செய்வார்கள் எனும் நம்பிக்கையும் எங்களுக்கு இருக்கிறது.
–>

ரிப்பீட் கிரிமினல்
ஒவ்வொரு குற்றவாளியும் ரிப்பீட் கிரிமினலாக இருக்கிறார்கள். குற்றம் செய்துவிட்டு ஜெயிலுக்கு செல்வது, மீண்டும் வெளியில் வந்து குற்றம் செய்வது என ஈடுபட்டு வருகின்றனர். சிறை என்பது குற்றவாளிகளை ஊக்குவிக்கும் யுனிவர்சிட்டியாக மாறியுள்ளது. சென்னையில் 19 நாளில் 20 கொலைகள் நடந்துள்ளன. சென்னைக்கு இருந்த பெயர் கெட்டுவிட்டது. சென்னை தற்போது இந்தியாவின் மர்டர் கேபிடலாக மாறிவிட்டது.
–>

இது நம் தமிழகம் இல்லை
இன்று கூட ராமநாதபுரத்தில் ஒரு பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுள்ளார். ஏதாவது போன் வந்தாலே பகீர் என இருக்கிறது. தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் எந்தப் பெண்ணுக்கு என்ன ஆனது என்கிற கவலைதான் போனை எடுக்கும்போதெல்லாம் இருக்கிறது. கூட்டு பாலியல் பலாத்காரம் தமிழ்நாட்டில் கேள்விப்படாத வார்த்தை. ஆனால் இப்போது நிர்பயா விவகாரம் போல தமிழ்நாட்டிலும் கூட்டு பலாத்கார சம்பவங்கள் நடக்கின்றன. இது நமது தமிழகம் கிடையாது. நம் கலாச்சாரம் கிடையாது.” எனத் தெரிவித்துள்ளார்.
–>

உள்துறை முதல்வரிடம் இல்லையா
மேலும் பேசிய அண்ணாமலை, “திமுகவை பொறுத்தவரை மாசெக்கள், ஒன்றிய செயலாளர் காவல்துறையினரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். மீறிச் செயல்பட்டால் அதிகாரிகளை தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்திவிடுவேன் என மிரட்டுகின்றனர். இதை எதற்காக முதல்வர் அனுமதிக்கிறார்? உள்துறை அவர் கையில் இல்லையா? அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தை சீரழித்துவிட்டு கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய நினைக்கிறாரா? காவல்துறை கட்சியினர் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும் என எண்ணுகிறாரா?
–>

பழைய குற்றப் பின்னணி
மூன்று நாட்களுக்கு முன்பு போலீசார் உஷாராக இருந்திருந்தால் இந்த கொலையையே தடுத்திருக்கலாம். புகார் அளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. உயிரிழந்தவரை குற்றவாளி போல் சித்தரிப்பதில் காவல்துறை காட்டும் வேகத்தை, குற்றவாளிகளை பிடிப்பதில் ஏன் காட்டவில்லை? பாலச்சந்தரின் பழைய பின்னணியை வெளிப்படுத்துவதில் காட்டும் அக்கறையை குற்றவாளிகளை பிடிப்பதில் காட்டலாமே? பாலச்சந்தர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு முழுநேரமாக பாஜகவில் அரசியல்வாதியாக பணியாற்றி வந்தார். மீண்டும் அவரை குற்றவாளியாக்குவது எந்த வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடியது?” எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed
English summary
BJP Annamalai slams Chief Minister on Crimes : சிறை என்பது குற்றவாளிகளை ஊக்குவிக்கும் யுனிவர்சிட்டியாக மாறியுள்ளது என்றும் உள்துறை செயலிழந்து விட்டது எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
Story first published: Wednesday, May 25, 2022, 18:43 [IST]
!function(f,b,e,v,n,t,s){if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)}(window,
document,’script’,’https://connect.facebook.net/en_US/fbevents.js’);
fbq(‘init’, ‘407111549682023’);
fbq(‘track’, ‘PageView’);