முதன்மை வங்கிக் கணக்கு

முன்பு வங்கிக்கணக்கை குடும்பத்தில் ஒருவர் மட்டும் வைத்து இருப்பார் ஆனால், தற்போது அனைவரும் வைத்து இருப்பது கட்டாயமாகி விட்டது.

முதன்மை வங்கிக் கணக்கு

தற்போது பலர் பல வங்கிக்கணக்குகளை வைத்துள்ளனர் ஆனால், குறைந்த பட்சம் இரு வங்கிக்கணக்குகள் அவசியமானது.

காரணம், ஒரு வங்கியில் தொழில்நுட்ப பிரச்சனை அல்லது வேறு தேவைகளுக்குத் தற்காலிகமாகப் பயன்படுத்த இன்னொரு வங்கிக்கணக்குத் தேவை.

எனவே, இதுவரை ஒரு வங்கிக்கணக்கு வைத்துள்ளவர்கள், இன்னொரு வங்கிக்கணக்கு துவங்க அறிவுறுத்துகிறேன்.

ஒரு தேசிய வங்கி இருப்பது நல்லது.

இரு வங்கிக்கணக்குகளில் ஒன்றை முதன்மை வங்கிக் கணக்கு என்று வைத்துக்கொள்வது நல்லது.

ஏன்?

தற்போது அனைத்துமே வங்கி சார்ந்த பணிகளாகி விட்டது.

பலரும் பல்வேறு காரணங்களுக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக்கணக்குகளைத் துவங்குகிறார்கள்.

சம்பளக்கணக்கு, வீட்டுக்கடன், நகைக்கடன் உட்படப் பல்வேறு காரணங்கள். இதில் சில கணக்குகள் பயன்படுத்தப்படாமலே இருக்கும்.

Mutual fund, Share, ECS, Insurance, TAX, LIC, Bank Loan, Govt subsidy உட்படப் பல்வேறு தேவைகளுக்காக வங்கிக்கணக்கை பயன்படுத்தி வருவோம்.

இவை அனைத்தையும் ஏதாவது ஒரு வங்கிக்கணக்கில் மட்டும் செய்வது நல்லது.

காரணம், பயன்படுத்தவில்லை என்று ஒரு வங்கிக்கணக்கை மூடினால், அந்த வங்கி தொடர்பாகக் கொடுத்த அனைத்தையும் வேறு வங்கிக்கு மாற்ற வேண்டும்.

எடுத்துக்காட்டுக்கு, முதலீடு செய்துள்ள Mutualfund ன் பரிவர்த்தனை (ECS) வங்கிக்கணக்கை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால், வாங்கிய அனைத்து நிறுவனங்களின் பங்குகளுக்கும் வங்கிக்கணக்கை மாற்ற வேண்டும்.

இது நடைமுறை சிக்கலைக் கொடுக்கும், அதோடு கூடுதல் அலைச்சல்.

சுருக்கமாக அனைத்து நிதி சம்பந்தப்பட்ட பணிகளுக்கும் ஒரே கணக்கைப் பயன்படுத்துவது நல்லது.

எனவே, நீங்கள் பயன்படுத்தும் ஏதாவது ஒரு முதன்மை வங்கிக்கணக்கை இது போன்ற தேவைகளுக்குக் கொடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.

முதிர்வு தொகை (Maturity Amount) வருகிறது என்றால், கணக்குத் துவங்கிய போது என்ன வங்கிக்கணக்கை கொடுத்தீர்களோ அதற்குத் தான் அனுப்புவார்கள்.

முதன்மை வங்கிக்கணக்கின் கிளையையும் மாற்றக் கூடாது. காரணம், IFSC Code மாறுவதால், மேற்கூறிய வசதிகளில் பணம் செலுத்த / பெற முடியாது.

எனவே, பணத்தைப் பெறும் காலத்தில் அந்த வங்கிக்கணக்கு இல்லையென்றால், அதை மாற்ற ஏராளமான நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும்.

எனவே, இவற்றை கருத்தில் கொண்டு மேற்கூறிய நிதி சார்ந்த பரிவர்த்தனைகள் அனைத்துக்கும் முதன்மை வங்கிக்கணக்கை பயன்படுத்தவும்.

கொசுறு

பலர் SBI வங்கியைப் பற்றித் தவறான எண்ணம் கொண்டுள்ளார்கள்.

தனியார் வங்கிகளுக்கு எந்த விதத்திலும் குறையாத வசதிகளை, செயலிகளை SBI கொண்டுள்ளது.

தற்போது வங்கிக்கணக்கை மின்னணு முறையிலேயே துவங்கலாம்.

வங்கிப்பணியாளர்களுடனான சேவையில் குறைபாடு இருக்கலாம் ஆனால், இணைய பரிவர்த்தனையிலேயே (Web & App) அனைத்தையும் செய்பவராக இருந்தால், சிறப்பான சேவை.

குறுந்தகவல் வருவதில், UPI பணம் செலுத்துவதில் மட்டும் குறைபாடுகள் உள்ளன.

தொடர்புடைய கட்டுரைகள்

ICICI Vs HDFC Vs SBI வங்கிகளில் சிறந்தது எது?

மொபைல் எண்ணை ஸ்பாம் செய்த SBI வங்கி

கிரெடிட் கார்டு பயன்கள் என்ன?

HDFC Credit Card Vs ICICI Credit Card Vs SBI Credit Card எது சிறந்தது?

Previous articleவைகாசி தேய்பிறை பிரதோஷம்..அமாவாசை..சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி | Vaikasi Amavasai devotees are allowed 5 days to go to Sathuragiri hill
Next articleமுதல்வரின் நேரடி கண்காணிப்பில் உள்ள.. தமிழக காவல்துறை கம்பீரத்தை இழந்துவிட்டது.. அண்ணாமலை விமர்சனம் | BJP leader Annamalai on balachandar murdered in chennai