மியூச்சல் ஃபண்ட்

ற்போது பலரால் பரவலாகப் பேசப்படும் விஷயமாக மியூச்சுவல் ஃபண்ட் உள்ளது. மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. Image Credit

மியூச்சுவல் ஃபண்ட்

முதலீடு பற்றிப் பேச்சு வரும் போது ஷேர் முன்பு பரவலாகப் பேசப்பட்டது ஆனால், அதில் உள்ள நெருக்கடிகளால் குறிப்பிட்ட பிரிவினரிடையே மட்டுமே பிரபலமானது.

ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் பலரிடையே எளிதில் சென்றடைந்து விட்டது.

Share Market ல் (பங்குச்சந்தையில்) எப்படி முதலீடு செய்வது என்று தெரியாதவர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் எளிதானது.

நீங்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை, எதில் முதலீடு செய்வது என்று இதில் அனுபவமுள்ள ஒருவரிடம் கேட்டு அதைச் செயல்படுத்துவது மட்டுமே.

SIP (Systematic Investment Plan)

மியூச்சுவல் ஃபண்ட் வரும் போது SIP பற்றிப் பலரும் கூற கேட்டு இருப்பீர்கள். இது ஒன்றுமில்லை வங்கியில் RD (Recurring Deposit) போடுவது போலத்தான்.

  • வங்கியிலிருந்து தானியங்கியாகப் பணத்தை ஒவ்வொரு மாதமும் எடுத்துக்கொள்ளும்.
  • தொடர முடியவில்லையென்றால், உடனே SIP நிறுத்திக்கொள்ளலலாம்.
  • ₹500 முதல் மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்யலாம்.
  • வங்கி நிரந்தரமாக இவ்வளவு சதவீதம் வட்டி என்று கொடுத்து விடுவார்கள். மியூச்சுவல் ஃபண்ட்டில் நிரந்தர வட்டி என்று கிடையாது.
  • பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப, கிடைக்கும் வட்டியில் மாற்றம் இருக்கும்.
  • எப்போது வேண்டும் என்றாலும், பணத்தை எடுக்கலாம்.
  • பணத்தை எடுக்க அனுமதித்த மூன்று வேலை நாட்களில் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.
  • SIP ல் முதலீடு செய்கிறீர்கள் என்றால், குறைந்த பட்சம் மூன்று வருடங்களுக்குப் பணம் எடுப்பதைப் பற்றி மறந்து விட வேண்டும்.
முதலீட்டுப் பணத்தை பல ஆண்டுகள் எடுக்காதவரை உங்களுக்கான இலாபமும் அதிகரிக்கும்.

இதன் மூலம் முதலீட்டு பணத்துக்கான RISK குறைகிறது. அதாவது பங்குச்சந்தையில் பெரிய சரிவு ஏற்பட்டாலும் அசல் பணம் குறைவதற்கான வாய்ப்புக் குறைவு.

அதிக இலாபம் வேண்டும் என்றால் RISK எடுக்கத் தயாராக இருக்க வேண்டும். இதில் RISK என்றாலும் நீண்ட கால முதலீடு என வரும் போது RISK குறைவாக இருக்கும்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது வங்கிகள் 5% – 7% வட்டி கொடுத்தால், மியூச்சுவல் ஃபண்ட்டில் தோராயமாக 11% – 15% கிடைக்கும்.

சில நேரங்களில் 25% வரையும் அதற்கு மேலும் கூடச் செல்லும்.

SIP அல்லாமல் குறிப்பிட்ட தொகையையும் ஒரு முறையில் முதலீடு செய்யலாம்.

எடுத்துக்காட்டுக்கு அலுவலகத்தில் ஊக்கத்தொகையாக ₹20,000 கிடைக்கிறது என்றால், அதை ஒரு முறையாக முதலீடு செய்து விடலாம்.

அனுபவம்

கடந்த ஐந்து வருடங்களாக (2016 – 2021) மியூச்சுவல் ஃபண்ட் பயன்படுத்துகிறேன். ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் அதிக இலாபம் மட்டுமே அடைந்துள்ளேன்.

இடைப்பட்ட காலத்தில் தனிப்பட்ட காரணத்துக்காகச் செலவுக்குப் பணத்தையும் எடுத்துள்ளேன். குறைந்த காலத்தில் அதிக இலாபம் கொடுத்துள்ளது.

பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்கள்

தற்போதைய நிலையில் (2021) பாஜக ஆட்சியில் இருக்கும் வரை பங்குச்சந்தை உயர்வில் இருக்கும், உயர்ந்து கொண்டே செல்லும்.

ஆட்சி மாறினால் இது போலத் தொடருமா என்பது நிச்சயமில்லை. எதையுமே கணிக்க முடியாது என்பதாலே இது RISK என்பதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும் நீண்ட கால முதலீட்டில் இலாபம் கிடைக்கும் என்பதே அனுபவம் உள்ளவர்களின் கருத்து. என் அனுபவத்தில் இது உண்மையே!

நம்பிக்கை வரும் வரை குறைந்தளவில் முதலீடு செய்து, ஓரளவு நம்பிக்கை வந்த பிறகு முதலீட்டுத் தொகையை அதிகரிக்கலாம்.

இலாபம் கிடைக்கிறது என்பதற்காக மியூச்சுவல் ஃபண்ட்டில் மட்டுமே முதலீடு செய்துகொண்டு இருக்க வேண்டாம். இது தவறான அணுகுமுறை.

மியூச்சுவல் ஃபண்ட் ஒரு வகை முதலீடு தான், இது போல FD, PPF, NPS என்று ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

எனவே, பிரித்துச் சேமிக்கும் போது ஒன்றில் நட்டமானாலும் இன்னொன்று காப்பாற்றும்.

குறிப்பு 1

மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்வது பெரிய விஷயமில்லை ஆனால், சரியான நிதியில் முதலீடு செய்கிறோமா என்பதே முக்கியம்.

எனவே, அனுபவமுள்ள நபரிடம் ஆலோசனையைப் பெற வேண்டும்.

தவறான நிதியில் முதலீடு செய்தால், இலாபத்துக்குப் பதில் நட்டமோ அல்லது இலாபம் பெரியளவில் கிடைக்காமலோ போகலாம்.

குறிப்பு 2

மேற்கூறியவை சந்தை அபாயங்களுக்குட்பட்டது. எனவே, சரியான நபரிடம் விவாதித்து ஆலோசனையைப் பெற்றுப் பின் முதலீடு செய்யவும்.

கணக்குத்துவங்க ஆதார் + PAN + வங்கிக்கணக்கு அவசியம்.

தொடர்புடைய கட்டுரை

Sovereign Gold Bonds வாங்கலாமா?

Previous articleபேரறிவாளனை கட்டியணைத்த முதல்வர்! இதெல்லாம் தமிழ்நாட்டுக்கு நல்லது இல்லை! பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்! | BJP Pon Radhakrishnan says it is not good for Tamil Nadu Chief Minister hug perarivalan
Next articleAnupama Parameswaran – Andharikki ugadi subhakankshalu…