மருத்துவக் காப்பீடு

ருத்துவக் காப்பீடு அனைவருக்கும் மிக முக்கியமானது. என்ன மாதிரியான காப்பீடு எடுக்கலாம் என்பது பற்றிக் காண்போம். Image Credit

மருத்துவக் காப்பீடு

மருத்துவம் மிகச்செலவு பிடிக்கும் சேவையாக மாறி வருகிறது. ஒரே ஒரு பெரிய உடல் நிலை பிரச்சனை கூட நம் வாழ்நாள் சேமிப்பை காலி செய்துவிடும்.

எனவே, மருத்துவக்காப்பீடு முக்கியமானது. பல்வேறு வகையான காப்பீடுகளில் நான் பயன்படுத்தும் மருத்துவக்காப்பீடு விவரங்களைக் கூறுகிறேன்.

கடந்த 4 வருடங்களாக ஒரு நிறுவனத்தின் மருத்துவக்காப்பீடு பயன்படுத்தி வந்தேன் ஆனால், அதைச் சரியாக விசாரிக்கவில்லை அல்லது அதன் முழுமையான பயனைப் பெறக்கூடிய காப்பீடு திட்டத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை.

எனவே, மற்ற நண்பர்களுடன் விவாதிக்கும் போது கிடைத்த அனுபவத்தில் இதைவிடச் சிறப்பான காப்பீடு திட்டங்கள் பற்றிய நிறுவன விவரங்கள் கிடைத்தன.

எனவே, ICICI Lombard நிறுவனத்துக்கு மாறிக்கொண்டேன்.

ஏற்கனவே பயன்படுத்திய நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடாததற்குக் காரணம், சரியாகத் தேர்ந்தெடுக்காத தவறு என் மீதும் இருப்பதால் தான்.

இதை அந்நிறுவனத்தின் தவறாக நான் கருதவில்லை.

சரியான கிரெடிட் அட்டையைத் தேர்ந்தெடுக்காமல் அந்நிறுவன கிரெடிட் அட்டை பயனில்லை என்று கூறுவது போலத்தான் இது.

HDFC & ICICI Lombard

HDFC Customer Relationship ல் இருந்து அழைத்து ICICI Lombard உடனான HDFC ஒப்பந்தத்தில் உள்ள மருத்துவக்காப்பீடு பற்றிக் கூறினார்கள்.

அச்சமயத்தில் நானும் தேடிக்கொண்டு இருந்ததால், இதை எடுத்துக்கொண்டேன்.

இது HDFC பயனாளர்களுக்கு மட்டுமானது. மற்றவர்கள் நேரடியாக ICICI Lombard தொடர்பு கொள்ளலாம். இதே சலுகைகள் கிடைக்குமா என்பது தெரியவில்லை.

ICICI Lombard

 • பல்வேறு காப்பீடு தொகையுள்ளது (Coverage), நான் ஐந்து லட்சம் எடுத்தேன். தொகை அதிகமாகும் போது Premium தொகையும் அதிகரிக்கும்.
 • பின்னாளில் தேவைப்படும் போது தொகையை அதிகப்படுத்திக்கொள்ளலாம். முன்னரே அதிகத் தொகைக்குக் காப்பீடு எடுப்பது சரியான முடிவு அல்ல.
 • ஒரே நேரத்தில் 2 / 3 வருடங்களுக்கு Premium செலுத்தினால் தள்ளுபடி கிடைக்கும்.
 • ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் மருத்துவப்பரிசோதனை செய்து கொள்ளலாம்.
 • பணமில்லா (Cashless) பரிவர்த்தனையைச் செய்ய முடியும்.
 • காப்பீடில் மருத்துவ உபகரணங்களும் (கையுறை, Bandaid Etc) உள்ளடக்கியது.
 • ஒரு வருடம் 5 லட்சம் காப்பீட்டு தொகையைப் பயன்படுத்தவில்லை என்றால், அத்தொகையில் 25% (1.25L) அடுத்த வருடம் சேர்த்துக்கொள்ளப்படும்.
 • நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கு அவர்கள் நிறுவனமே காப்பீடு வழங்கும். எனவே, தனிப்பட்ட காப்பீடு சேவையைப் பயன்படுத்தத் தேவையில்லை.
 • ஓய்வு பெறும்வரை இது தொடரும் என்பதால், ஒவ்வொரு ஆண்டும் 25% கூடிக்கொண்டே (carry forward) செல்லும்.
 • 60 / 65 வயதுக்குப் பிறகு மருத்துவக் காப்பீடு எடுக்க முடியாது. எனவே, அந்தச் சமயத்தில் இக்காப்பீடு உதவும்.
 • அச்சமயத்தில் பிள்ளைகள் பணியில் இணைந்து விடுவதால், அவர்கள் நிறுவனக் காப்பீட்டில் பெற்றோர்களாக இணைய முடியும்.
 • ஆனால், எதிர்காலத்தில் பிள்ளைகள் இந்தியாவில் இருப்பார்கள் என்பதற்கு உத்தரவாதமில்லாததால் பிள்ளைகளை எதிர்பாராமல் இருக்க இக்காப்பீடு உதவும்.
 • காரணம், வயதான காலங்களில் மருத்துவச் செலவு தவிர்க்க முடியாதது. இச்செலவுகள் சேமிப்பை கரைத்து விடும். எனவே, காப்பீடு அவசியமாகிறது.
 • சுய தொழில் செய்பவர்களுக்கு மருத்துவக் காப்பீடு மிக முக்கியமானது. பலர் இன்னமும் மருத்துவக் காப்பீடு முக்கியத்துவம் உணராமல் உள்ளனர்.
மேற்கூறியவை அனைவருக்கும் பொதுவானதல்ல. எனவே, காப்பீடை பெறும் முன்பு அனைத்தையும் விசாரித்து உறுதி செய்த பிறகு காப்பீடை பெறவும்.

காப்பீடு சலுகைகள், பயன்கள் நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும்.

எனவே, எந்தக் காப்பீடு நிறுவனம் தரும் திட்டம் பயனுள்ளதாக உள்ளது என்று ஒப்பீடு செய்து பின் பெறவும்.

அவசரப்பட்டால், தவறான முடிவுக்காகப் பின்னர் வருந்த நேரிடும்.

தொடர்புடைய கட்டுரைகள்

HDFC Credit Card Vs ICICI Credit Card Vs SBI Credit Card எது சிறந்தது?

ICICI Vs HDFC Vs SBI வங்கிகளில் சிறந்தது எது?

Previous articlePriyanka Mohan – #favsong #arr @anitakamaraj Edited by @ashwin_guru17 Styling @neyanidhi…
Next articleThank you all…