Delhi
oi-Vishnupriya R
டெல்லி: ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கலில் 16 பேருக்கு மங்கி பாக்ஸ் வைரஸ் பரவியுள்ள நிலையில் அவர்களுக்கு இருக்கும் ஒரு ஒற்றுமை என்ன என்பது தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் கட்டுக்குள் கிடப்பதை நினைத்து சந்தோஷப்படுவதா இல்லை மங்கி பாக்ஸ் எனும் புதிய வைரஸ் பரவலை நினைத்து துக்கப்படுவதா என தெரியவில்லை. அந்த அளவுக்கு 2020 ஆம் ஆண்டு முதல் உலகில் சோகங்கள் ஏற்பட்டு வருகின்றன.
2021 இல் சரியாகிவிடும், 2022 இல் சரியாகிவிடும் என பார்த்தால் கொரோனா சரியாகுதோ இல்லையோ புதிய புதிய வைரஸ்கள் பரவி பீதியை ஏற்படுத்துகின்றன. இதனிடையே குழந்தைகளுக்கு தக்காளி வைரஸ் பரவியது.
10 நாட்களில் 12 நாடுகளுக்கு பரவிய மங்கி பாக்ஸ்.. 90 பேருக்கு பாதிப்பு.. வேகமாக பரவும் வைரஸ்

தக்காளி வைரஸ்
இந்த தக்காளி வைரஸால் உயிரிழப்பு ஏதும் இல்லை என்ற தகவல் சற்று ஆறுதல் அளிக்கிறது. ஆனால் இந்த குரங்கு வைரஸ் 10 நாட்களில் 12 நாடுகளுக்கு பரவி அச்சத்தை கிளப்பி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் இந்த வைரஸ் பரவி வருகிறது. ஏற்கெனவே 90 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எலிகள்
இந்த வைரஸ் பொதுவாக விலங்குகளிடம் இருந்து பரவுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். அது போல் எலிகளிடம் இருந்து இந்த வைரஸ் வேகமாக பரவுவதாகவும் சொல்லப்படுகிறது. மூச்சுக் குழாய்கள் மூலம் மற்றவர்களுக்கு மங்கி பாக்ஸ் பரவுகிறது. அது போல் மூக்கு, கண்கள் மூலமும் உடலில் ஏற்படும் புண்கள் வழியாகவும் பரவுகிறது.

மங்கி பாக்ஸ்
ஆனால் அண்மை ஆய்வறிக்கைகளின் படி இந்த மங்கி பாக்ஸ் வைரஸானது உடலுறவு மூலம் ஏற்படுகிறது. ஏற்கெனவே இந்த நோய் பாதித்தவருடன் உடல் ரீதியாக தொடர்பு வைத்துக் கொள்ளும் மங்கி பாக்ஸ் வைரஸ் அந்த நபருக்கும் பரவுகிறது. இந்த நோய் பாதித்தால் தலைவலி, காயச்சல், தசை வலி, கைகள், கால்களில் வலி ஆகியவை ஆரம்பர கால அறிகுறிகளாகும்.

சிறிய கட்டிகள்
அது போல் மங்கி பாக்ஸ் வைரஸ் உடலில் தீவிரமடைந்தால் சிறிய சிறிய கட்டிகள் உடலில் ஏற்படுகின்றன. அந்த கட்டிகள் புண்ணாகி உடல் முழுவதும் பரவுகின்றன. பலர் இதை பெரியம்மை நோய் என நினைத்தார்கள். பெரியம்மைக்கு சிகிச்சை உண்டு, ஆனால் மங்கி பாக்ஸ் வைரஸுக்கு சிகிச்சை கிடையாது.

லண்டனில் முதல்முறையாக
லண்டனில் மே 7 ஆம் தேதி ஒருவருக்கு முதல்முறையாக மங்கி பாக்ஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவர் அண்மையில் நைஜீரியாவில் இருந்து லண்டன் திரும்பியிருந்தார். ஆப்பிரிக்காவில் யாரிடம் இருந்தோ இந்த நபர் வைரஸை தொற்றிக் கொண்டதாக நிபுணர்கள் தெரிவித்தனர். பிரிட்டனில் 6 பேருக்கு புதிதாக மங்கி பாக்ஸ் நோய் பரவியுள்ளது.

ஓரினச்சேர்க்கையாளர்கள்
இந்த 6 பேரும் ஓரினச்சேர்க்கையாளர்கள், இரு பாலின சேர்க்கையாளர்கள் ஆவர். இந்த 6 பேருமே ஆண் நண்பருடன் உறவு கொண்டுள்ளனர். பிரிட்டன் மட்டுமல்ல, ஸ்பெயினில் 7 பேருக்கும் போர்ச்சுகலில் 9 பேருக்கும் மங்கி பாக்ஸ் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த 16 பேரும் ஓரினச்சேர்க்கையாளர்கள் இரு பாலின சேர்க்கையாளர்கள் ஆவர். இதுதான் இந்த 16 பேருக்கும் உள்ள ஒரே ஒற்றுமையாகும். இதனால் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு பிரிட்டன் சுகாதார நிறுவனம் அறிவுரை வழங்கியுள்ளது. அது போல் பார்கள், அழகு நிலையங்களிலும் அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.
English summary
Monkey pox virus: Do you know what is the difference between newly affected persons?
Story first published: Monday, May 23, 2022, 13:18 [IST]