Delhi

oi-Vignesh Selvaraj

Google Oneindia Tamil News

பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.8, டீசல் மீதான கலால் வரி ரூ. 6 குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியாவில் வரலாறு காணாத வகையில், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

Centre Cuts excise duty on Petrol by rs 8 per litre and on Diesel by rs 6 per litre, says Nirmala sitharaman

இந்நிலையில், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரி குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார். இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பெட்ரோல் மீதான மத்திய கலால் வரி லிட்டருக்கு ரூபாய் 8, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6 குறைக்கப்படுகிறது. இதன் எதிரொலியாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50, டீசல் லிட்டருக்கு ரூ.7 விலை குறையும் எனத் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை... 45 நாட்களாக மாற்றமில்லை - வாகன ஓட்டிகள் நிம்மதிபெட்ரோல், டீசல் விலை… 45 நாட்களாக மாற்றமில்லை – வாகன ஓட்டிகள் நிம்மதி

English summary

Central government reducing the Central excise duty on Petrol by Rs 8 per litre and on Diesel by Rs 6 per litre. A subsidy of ₹ 200 per gas cylinder to over 9 crore beneficiaries of Pradhan Mantri Ujjwala Yojana.

Story first published: Saturday, May 21, 2022, 19:25 [IST]



Source link

Previous articleநல்லாத்தானே போய்கிட்டிருக்கு! ஸ்பீட் பிரேக் போட்ட பாஜக! ஐ லியோனி மீது போலீசில் புகார்! ஓ அதுக்காகவா? | BJP complains against dmk I Leoni for slandering SC people
Next articleநெருப்பு இல்லாம புகையாதே! ஸ்டாலினையே பார்த்த ரவீந்திரநாத்.. ஓ இதான் காரணமா? விசாரித்த இபிஎஸ் கேம்ப்! | Why O P Raveendranath meets CM Stalin? EPS is in the hunt for answers