Bajaj Pulsar RS200 BS6 Launched in India; Priced At Rs 1.45 Lakh
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்ட பல்சர் ஆர்எஸ்200 பைக்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 2020 பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கள், 1.45 லட்சம் ரூபாய் விலையில் கிடைக்கிறது. இந்த பிஎஸ்6 மாடல்களை பிஎஸ்4 மாடல்களுடன் ஒப்பிடும் போது 3,000 ரூபாய் அதிகமாக இருக்கும். மேம்படுத்தப்பட்ட ஆர்எஸ்200 பைக்களில் ஸ்டைல் மாற்றங்கள் இல்லாமல் இருந்தாலும், மேம்படுத்தப்பட்ட வெர்சன்கள், தற்போது இரண்டு கிலோ அதிக எடை கொண்டதாக இருக்கும். பிஎஸ்6 பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்களில் ஒரே மாதிரியான மெக்கானிக்கல் அம்சங்களுடன் கிடைக்கிறது. இருந்தாலும், பஜாஜ் நிறுவனம், புதிய கிராபிக்ஸ்களுடன் கூடிய மோட்டார் சைக்கிள்களை இந்தாண்டின் பிற்பகுதியில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிய வந்துள்ளது.
You May Like:ரூ.1.03 லட்சம் ஆரம்ப விலையில் புதிய BS6 Bajaj Pulsar NS160 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!
கூடுதலாக பஜாஜ் நிறுவனம் பிஎஸ்6 180 எஃப் மாடல்களையும் அறிமுகம் செய்துள்ளது. பல்சர் 220 எஃப் மாடல்கள் தற்போது 1 லட்சத்து, 17 ஆயிரத்து 286 ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோ ரூம் விலை டெல்லியில்) கிடைக்கிறது. இந்த விலையை பிஎஸ்4 மாடலின் விலையுடன் ஒப்பிடும் போது 9,000 ரூபாய் அதிகமாகும். பஜாஜ் பல்சர் 220 எஃப் மாடல்கள் 220 cc, இன்ஜின்களுடன், அதிகபட்ச ஆற்றலான 20.12 bhp-ல் 8,500 rpm-லும், பீக் டார்க்கான 18.55 Nm-ல் 7,000 rpm-லும் இயங்கும்.
You May Like:பஜாஜ் பல்சர் 180F பிஎஸ்6 பைக் ரூ.1.07 லட்சத்தில் அறிமுகம்…!
மற்ற பல்சர் மாடல்களும் பிஎஸ்6 எமிஷன் விதிகளுக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது. என்ட்ரி-லெவல் பஜாஜ் பல்சர் 125 நியோன் மாடலின் விலை 69 ஆயிரத்து 997 ரூபாய் விலையிலும் , பல்சர் 150 மாடல்கள் 94 ஆயிரத்து 957 ரூபாய் விலையிலும், பல்சர் 150 டூவின் டிஸ்க் மாடல்கள் 98 ஆயிரத்து 835 ரூபாய் விலையிலும் கிடைக்கிறது. பிஎஸ்6 பல்சர் என்எஸ்200 மற்றும் பல்சர் ஆர்எஸ்200 மாடல்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. பல்சர் என்எஸ்160 மாடல்கள் 94 ஆயிரத்து 195 ரூபாய் விலையிலும், என்எஸ்200 மாடல்கள் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 355 ரூபாய் விலையிலும், ஆர்எஸ்200 மாடல்கள் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 933 ரூபாய் விலையிலும் கிடைக்கிறது. மேற்குரிய .