சென்னை : திருமண சான்றிதழில் திருத்தம் செய்ய வேண்டுமென்றால் ஆன்லைனிலேயே விண்ணப்பித்து பெறும் வசதியை அறிமுகப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதனால் இனி திருமண சான்றிதழில் திருத்தங்கள் மேற்கொள்ள சார்பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டிய தேவை இல்லை.
பதிவுத்துறை இணையதள பக்கத்திற்கு சென்று லாகின் செய்து திருமண சான்றிதழில் திருத்தும் மேற்கொள்ளலாம். தமிழக அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.