Mumbai
oi-Hemavandhana
மும்பை: பிராமணர்களை வெறுத்தால் அவ்வளவுதான் என்று சாபம் விட்ட நடிகை, இப்போது ஜெயிலுக்குள் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.
நடிகை கேதகி சித்தாலே… இவர் இந்தி மற்றும் மராத்தி டிவி தொடர்களில் நடித்து வருபவர்… அடிக்கடி எதையாவது பரபரப்பாக பேசி சர்ச்சையில் சிக்கி கொள்பவரும்கூட.
இப்படித்தான், கடந்த வருடம் சத்ரபதி சிவாஜியை, மேற்கோள் காட்டி சோஷியல் மீடியாவில் கன்னாபின்னாவென்று பதிவிட்டு சர்ச்சையில் சிக்கினார்..
மகாராஷ்டிரா முதல்வராக பிராமணர் வர வேண்டும்! மத்திய அமைச்சர் ராவ்சாகேப் பரபர பேச்சு

பிராமணர்கள்
இப்போது, முன்னாள் மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டுவிட்டார்.. “நீங்கள் பிராமணர்களை வெறுக்குறீர்கள். உங்களுக்கு நரகம் காத்திருக்கிறது” என்று தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.. ஆனால், சரத்பவாரை இவர் நேரடியாக குறிப்பிடவில்லை. அதற்கு பதிலாக, பவார் என்றும் 80 வயதானவர் என்றும் மறைமுகமாக கூறியிருந்தார்.. எனினும் சரத்பவாருக்கு இப்போது 81 வயதாகிறது.

புகார்கள்
இப்படி ஒரு பதிவால், தேசியவாத காங்கிரசை சேர்ந்தவர்கள் கொந்தளித்து விட்டார்கள்.. தானே, புனே, துலே போலீஸ் நிலையங்களில் புகார்களும் அளித்தனர்.. அதேபோல, மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், நடிகை கேதகி சிதாலேவுக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியினர் வரிசையாக புகார் அளித்தனர்.

நடிகை கைது
இதைத்தொடர்ந்து இணையவழி குற்ற தடுப்புபிரிவு போலீசார், நடிகை கேத்தகி சித்தலேவுக்கு எதிராக 3 பிரிவுகளில் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை நேற்று வரை, தானே போலீசார் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டும் அனுமதித்திருந்தது. இதற்கிடையே, சரத்பவாரை சர்ச்சை அளிக்கும் வகையில் விமர்சித்த நடிகை மீது மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது..

அதிரடி உத்தரவு
மும்பையில் 2 வழக்குகளும், அகோலி மாவட்டத்தில் ஒரு வழக்கும் அவர் மீது பதிவாகி உள்ளன.. தற்போது, நடிகையின் போலீஸ் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்… வரும் ஜுன் 1-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது… இந்த உத்தரவை சிறிதும் எதிர்பார்க்காத நடிகை, ஜாமீன் கேட்டு தானே கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்… இப்போது ஜெயிலில் உள்ளார்..!
English summary
Actress arrested for criticism against Sharad Pawar and says about brahmins
Story first published: Friday, May 20, 2022, 14:00 [IST]