நினைத்தபடி அவள் அமர்கின்ற இடம் வாசப்படி..
ஒருவர் உழைப்பில் உயர்வு கடினம் இருவரும் இணைந்து வேலைக்கு சென்றால் தான் நாம் நினைக்கும் காரியங்கள்  நிறைவேறும் என்று அவளுக்குள் புலம்புகிறாள் – சோமு சாவித்திரி சிறுகதை – pattamaram somu sirukathai

வரவு மட்டுமா வாழ்க்கை, செலவிலும் தானே உள்ளது வாழ்க்கை, அவள் கண்களில் கண்ணீர் துளி மெல்ல வழிகின்றது.

முகத்தில் வலி, அப்பொழுது பக்கத்து வீட்டில் வசிக்கும் நெருங்கிய தோழி வருகிறார், “அக்கா அக்கா எங்கள் வீட்டுக் காரர் தினமும் மது அருந்திவிட்டு பணம் தருவதில்லை, குழந்தைகளுக்கு எதுவும்  வாங்கித் தருவதில்லை, ரேஷன் அரிசியும் முடிந்துவிட்டது” பணம் இருந்தால் தாருங்கள் சம்பளம் வாங்கி உங்களுக்கு தருகிறேன் என்று சொல்ல.
உடனே அவளும் நூறு ரூபாய் எடுத்து அவளிடம் கொடுக்க வாங்கியவள் கண்ணீரோடு செல்ல. இரக்கமுள்ள மனது இப்படித்தான் இல்லை என்று சொல்லாமல், யாராவது கேட்டால் இருப்பதை கொடுத்து காப்பாற்றும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் கூடப் பிறந்த சகோதரி சகோதரன் போல பழகுவார்கள், இவளும் அப்படித்தான்.

பொறுமையின் சிகரம் பெண்ணென்றால் அவள்தான்..
மீண்டும் சிந்தனைக் குழப்பத்தில் இதயம். அதிக சிந்தனை அவளின் இதயத்துடிப்பு படபடக்க நெஞ்சை பிடித்தவாறு நெஞ்சு வலிக்கிறது எரிகிறது என்று கூச்சலிட்டாள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் ஓடி வந்து கையைப் பிடிக்க அப்படியே சரிந்து சாய்ந்துவிட்டாள்..

அதிக குழப்பங்கள் அதிக சிந்தனை பெண்களுக்கு ஆகாது….

கணவனுக்கு தகவல் சொல்லுகின்றார்கள் ஓடோடி வருகிறார். அவள் தன் உடலை விட்டு காற்றோடு கலந்து சென்றுவிட்டாள்…
கையை பிடித்தால் எழுந்திரு என்றார், கன்னத்தை தட்டினார், கண்ணைத் திற என்றார்.. தன் கண்ணீரே மேலே விழ கதறி அழுதார்,
பதறி அடித்து அழைத்துப் போனவன் எமன் அல்லவா எழுந்திருக்கவில்லை….

“மனைவி இல்லாத வாழ்க்கை மண்ணில் மரணத்தை போல்”
“துணை இல்லாத வாழ்க்கை துடுப்பில்லாத கட்டுமரம் போல”
கணவனை இறந்தாலும் மனைவியின் நிலை இதுவே மனைவி இறந்தாலும் கணவனின் நிலையும் இதுவே..
துடித்தான்! மகளை அருகில் வைத்து தங்கமே உன் தாயை பார் அனாதையாய் நம்மை விட்டுச் சென்றுவிட்டாள்..
குழந்தையும் அழுது கொண்டே இருந்தது என்ன செய்வது.
சொந்தங்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் அழுது அழுது கண்கள் சிவக்க கண்ணீரோடு நின்றிருக்க. உறவினர்களும் சுடுகாடு வரை சென்று அடக்கம் செய்து விட்டு அவரவர் சென்றுவிட தந்தையும் மகளும் தவித்து துடித்து சில நாட்களும் கடந்து போனது…

இப்படியே நாட்கள் கடந்தால் நாளை குழந்தையின் வாழ்க்கை என்னாவது என்று சிந்தித்துக்கொண்டு மனைவியின் போட்டோ முன் கலங்க, மாலை நேரம் குழந்தை அருகே வந்து “அப்பா அப்பா இருளில் அமர்ந்து கொண்டு இருக்கிறீர்கள்” என்று சொன்னவாறு தீபத்தை ஏற்ற தீப்பெட்டியை எடுக்கின்றாள் மகள்
உடனே தந்தை கையை சுட்டு விடும் என்று தீப்பெட்டியை வாங்கிக்கொள்கிறார். “இல்லை அப்பா நானே ஒளியை தருகிறேன்” என்று சொல்ல “இனி என் வாழ்க்கைக்கு ஒளி நீதான் செல்வமே” எனக்கென்று யார் உண்டு என்று மகளை மடிமீது வைத்து சொல்லுகின்றார். நாளை வேலைக்கு சென்று திரும்பி வரும்போது  உனக்கு என்ன வேண்டும் என்று கேட்கின்றார். மகளும் “எனக்கு காலுக்கு கொலுசு வேண்டும்” என்று கேட்கின்றார். “வாங்கி தருகிறேன்” என்று சொல்லி விட்டு அன்று இரவு அழுகின்ற விழிகளோடு உறங்குகின்றார்..

காலை விடிந்ததும் வேலைக்கு புறப்பட்டு சென்று விடுகிறார். குழந்தையும் பள்ளிக்கூடம் சென்று விடுகிறது மாலை வருகின்றார் செல்ல மகளுக்கு ‘கால் கொலுசை’ வாங்கிக் கொண்டு வருகையில்,,
அங்கே அதர்ச்சிகாத்துக்கொண்டிருந்தது வீட்டுக்குள் சென்று பார்த்தால் மகளும் இறந்து கிடக்கின்றள்…

என்ன சோதனை ஒன்றுதான் உறவென்று இருந்தது அதுவும் நின்று போனது தனி மரம் ஆனேன் என்று தவித்தார் “ஒளி விளக்கை ஏற்றி வைத்தாய், ஒளியைத் தந்து விட்டு நீ ஏன் மறைந்து கொண்டாய் மகளே” எனக்கென்று யாருண்டு என்னை விட்டு ஏன் சென்றீர்கள் இருவரும், என்னையும் உங்களோடு அழைத்துச் செல்லுங்கள் என்று கதறினார்.
கொலுசு எடுத்து தன் மகளின் கால் மீது வைத்துவிட்டு
கண்ணீரால் பாத பூஜை செய்கின்றான்..

தங்கமே தவிக்கின்றேன்
செல்வமே எழுந்திடு
வைரமே துடிக்கின்றேன்
துயரத்தில் பாரம்மா..

குழந்தையை எடுத்து முறைப்படி தாயின் பக்கத்தில் அடக்கம் செய்கிறார்..
இரு சமாதிக்கும் இடையிலே அமர்ந்தபடி அழுகின்ற விழி வடிகின்ற நீர் துளி சொல்லுகின்ற பாடல் இதோ…

ஒளி விளக்கும் அணைந்து போனதம்மா
ஒரு கிளியின் சிறகு உடைந்து வாடுதம்மா.

விதிகளும் ஊஞ்சலிலே விளையாடி
வினை என்று சிறைபட்டு போனதம்மா…

தாயென்னும் வீட்டினிலே குடியிருந்தேன்
தாரம் எனும் அன்பினிலே மகிழ்ந்தேனம்மா.

கள்ளம் இல்லா பிள்ளை ஒன்றை வளர்த்து வந்தேன் அவள் கால்களிலே சலங்கை கட்டி வைத்து இருந்தேன்
எருமை என்னும் வாகனத்தில் வந்த யமன் எப்படியும் கொண்டு போனானம்மா…

காலை விடிந்தது சுடுகாடு வழியே சென்றவர்கள் பார்த்தார்கள் இருவர் சமாதிக்கு நடுவிலே இவரும் சவமக கிடந்தார்…
மண்ணுக்குள் அவரையும் மறைத்துவிட்டு மேலே ஒரு தீபத்தை ஏற்றி வைத்தார் அதுவும் அணைந்துவிட்டது காற்றிலே…

ஒளி விளக்கும் அனைத்து போனதம்மா சுருக்கமான கதை.

கவிதை நீரோடை கரையினிலே ஒரு கண்ணீர் கதை – pattamaram somu sirukathai.

– அவிநாசி சோமு சாவித்திரி

Previous article
Next articleஇன்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.. அதில் சென்னை,மேற்கு மாவட்டங்கள் கோ…