BS6 Bajaj Avenger Cruise 220 & Street 160 Launched In India
பஜாஜ் ஆட்டோ நிறுவனம், மேம்படுத்தப்பட்ட புதிய பிஎஸ்6 பைக்களான அவெஞ்சர் குரூஸ் பைக் வகைகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பஜாஜ் அவெஞ்சர் குரூஸ் 220 மற்றும் அவெஞ்சர் ஸ்டீரிட் 160 வாகனங்கள், புதிய எமிஷன் விதிகளுக்கு உட்பட்டதாக இருப்பதுடன், பிஎஸ்4 வெர்சன்களை போலவே இருக்கும். பஜாஜ் அவெஞ்சர் ஸ்டீரிட் 160 பிஎஸ்6 வகைகள் தற்போது 93 ஆயிரத்து 677 ரூபாய் விலையில் கிடைக்கிறது. இது பிஎஸ்4 மாடல்களின் விலையை ஒப்பிடும் போது, 12 ஆயிரம் ரூபாய் அதிகமாக இருக்கும். 2020 பஜாஜ் குரூஸ் 220 பிஎஸ்6 பைக்களின் விலை 1.16 லட்சம் ரூபாய் விலையில் கிடைக்கிறது. இது பிஎஸ்4 மாடல்களை விட 11 ஆயிரதது 500 ரூபாய் அதிகமாக இருக்கும். (அனைத்து விலைகளும், டெல்லியில் எக்ஸ் ஷோ ரூம் விலையாகும்).
You May Like:புதிய Bajaj Pulsar RS200 BS6 பைக் விற்பனைக்கு அறிமுகம்… விலை ரூ.1.45 லட்சம்…!
2020 பஜாஜ் அவெஞ்சர் குரூஸ் 220 பைக்கள் ஒரே மாதிரியான டிசைன் லாங்வேஜ் உடன் ஆம்பிள் குரோம் மற்றும் உயரமான விண்ட் ஸ்கிரீன்கள் முன்புறத்தில் இருக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக இந்த பைக்களில் டிஜிட்டல் இன்ஸ்டுரூமெண்ட் கான்சோல், மற்றும் செகண்டரி டிஸ்பிளேவில் பெட்ரோல் டேங்க்களுடன் ஹார்பர் டெல்டால் லைட்களும் இடம் பெற்றுள்ளது. இந்த குரூஸ் பைக்களில், டிசைன் மாற்றங்களுடன் ஒரே மாதிரியான ஹேண்டில்பார்களுடன் கிடைக்கிறது.
You May Like:ரூ.1.03 லட்சம் ஆரம்ப விலையில் புதிய BS6 Bajaj Pulsar NS160 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!
ஆற்றலை பொருத்தவரை அவெஞ்சர் குரூஸ் 220 பிஎஸ்6 மாடல்கள் 220 சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுட்-கூல்டு, எரிபொருள் இன்ஜெக்ட்டட் இன்ஜின்களுடன் 18.7 பிஎச்பி ஆற்றலில் 8,500 ஆர்பிஎம் மற்றும் 17.5 என்எம் டார்க்கில் 7,000 ஆர்பிஎம்-லும் இயங்கும். இந்த இன்ஜின் 5 ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
You May Like:பஜாஜ் பல்சர் 180F பிஎஸ்6 பைக் ரூ.1.07 லட்சத்தில் அறிமுகம்…!
2020 பஜாஜ் அவெஞ்சர் ஸ்டீரிட் 160 பிஎஸ்6 மாடல்களில் எந்த காஸ்மெடிக் மாற்றமும் செய்யப்படவில்லை என்ற போதும், இந்த ஆற்றல் 160 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின்களுடன் எரிபொருள் இன்ஜெக்ட்டட் சிஸ்டமும் இடம் பெற்றிருக்கும். இந்த மோட்டார் 5 ஸ்பீட் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும்.
You May Like:புதிய BS6 TVS Scooty Pep Plus ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்…ஆரம்ப விலை ரூ.51,754 ஆயிரம்..!
மேற்குரிய இரண்டு பைக்களிலும் டெலஸ்கோபிக் முன்புற போர்க் மற்றும் டூயல் ஷாக் அப்சார்பர்கள் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. பிரேக்கின் ஆற்றலை பொருத்தவரை, முன்புற டிஸ்க் பிரேக்களுடன் டிரம் யுனிட்கள் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ்கள் வழக்கம் போலவே இடம் பெற்றிருக்கும். அவெஞ்சர் 220 பைக்கள், பிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்ட சுசூகி இண்ட்ரூடர் பைக்களுக்கு போட்டியாக இருக்கும்.