Mumbai
oi-Shyamsundar I
மும்பை: டாடாவின் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றின் எஞ்சின் நடுவானில் செயல் இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா நிறுவனம் டாடாவிற்கு விற்பனை செய்யப்பட்டுவிட்டது. தற்போது டாடா நிறுவனம் மூலம் இயக்கப்பட்டு வரும் ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் எப்படியாவது மக்கள் இடையே பிரபலம் அடைய முயன்று வருகிறது.
அதோடு ஏர் இந்தியாவில் செய்யப்படும் புக்கிங்கை அதிகரிக்கவும் அந்த நிறுவனம் முயற்சிகளை எடுத்து வருகிறது.
சென்னையில் பரபரப்பு! விமானம் தரையிறங்கும் நேரத்தில்.. பைலட் கண்ணில் பாய்ந்த

ஏர் இந்தியா
இந்த நிலையில்தான் டாடா நிறுவனத்தின் ஏர் இந்தியா நிறுவனம் நடுவானில் திடீரென பெரிய சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. ஏர் இந்தியாவிற்கு சொந்தமான ஏர்பஸ் ஏ 320 விமானம் ஆகும் அது. நேற்று மும்பையில் இருந்து அந்த விமானம் பெங்களூருக்கு சென்றுள்ளது. ஆனால் விமானம் புறப்பட்ட 27 மணி நேரத்தில் விமானத்தில் அதிகமாக turbulance இருந்தது. விமானத்தில் அதீத சத்தமும் வந்துள்ளது.

என்ன சொன்னார்?
விமானத்தை திருப்புவதிலும் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. விமானத்தில் இருந்த பயணிகளும் இதை உணர தொடங்கி உள்ளனர். இதையடுத்துதான் அந்த அறிவிப்பு வந்தது. விமானி அப்போது கொடுத்த அறிவுப்புதான் பயணிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதில்.. விமானத்தின் ஒரு எஞ்சின் வேலை செய்யவில்லை.

எஞ்சின் வேலை செய்யவில்லை
இதனால் நாம் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எல்லோரும் சீட் பெல்ட்டை அணிந்து கொள்ளவும். நாம் பத்திரமாக மும்பைக்கு திரும்புவோம். அச்சப்பட வேண்டாம் என்று அறிவித்தனர். இந்த அறிவிப்பை கேட்டு பயணிகள் ஸ்டன் ஆகினர். ஆனாலும் விமானம் மிகவும் பாதுகாப்பாக ஒரு எஞ்சின் உதவியுடன் மும்பைக்கு திரும்பி வந்து தரையிறங்கியது.

பாதுகாப்பாக இறங்கியது
விமானத்தின் ஒரு எஞ்சினில் இருக்கும் எக்ஸ்சாஸ்டில் இருந்து வெளியேறும் புகை அதிக வெப்பநிலையில் வெளியேறி இருக்கிறது.எஞ்சின் கோளாறு காரணமாக இப்படி ஏற்பட்டு இருக்கலாம். அதுவே அதிக ரேஞ்சில் மொத்தமாக செயல் இழக்க காரணமாக இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. நடுவானில் எஞ்சின் செயல் இழந்தாலும் விமானிகள் சாமர்த்தியமாக செயல்பட்டதால், விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
இந்த கோளாறு எப்படி ஏற்பட்டது என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
English summary
Air India plane engine shuts off when it is bound to Bangalore from Mumbai. டாடாவின் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றின் எஞ்சின் நடுவானில் செயல் இழந்த சமபவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Story first published: Friday, May 20, 2022, 15:03 [IST]