Chennai

oi-Mathivanan Maran

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் மீது 85% பேர் திருப்தி தெரிவித்துள்ளதாக ஐ.ஏ.என்.எஸ்.- சி வோட்டர் சர்வே தெரிவித்துள்ளது.

2021-ம் ஆண்டு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் புதிய அரசுகள் அமைந்து ஓராண்டை கடந்த நிலையில் அதன் செயல்பாடுகள் தொடர்பாக ஐ.ஏ.என்.எஸ்- சி வோட்டர் ஆய்வு ஒன்றை நடத்தியது.

85% TN voters satisfied with CM Stalin and DMK Govt: IANS- C Voter Survey

தமிழக முதல்வர், தமிழக அரசின் செயல்பாடுகள், பிரதமர் மோடியின் செயல்பாடுகள், பிரதமர் பதவிக்கு யாருக்கு ஆதரவு ஆகியவை தொடர்பாக ஐ.ஏ.என்.எஸ்- சி வோட்டர் நடத்திய ஆய்வு முடிவுகள் விவரம்:

இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் மிகவும் திருப்தி என 41% பேரும்; 44% பேர் திருப்தியாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர். மொத்தம் 85% பேர் முதல்வர் ஸ்டாலின் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மொத்தம் 17%க்கும் குறைவானவர்களே தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என கூறியுள்ளனர்.

மேலும் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் மிகவும் திருப்தி என 30% பேரும் திருப்தி அளிப்பதாக 50% பேரும் தெரிவித்துள்ளனர். மொத்தமாக தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு 81% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் 13%க்கும் குறைவானவர்களே தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தி இல்லை எனவும் தெரிவித்திருக்கின்றனர்.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாயின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என 35% பேர் கூறியுள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக 10% பேர் மட்டுமே கூறியுள்ளனர்.

 ஊட்டியில் இருந்தே வேலையை ஆரம்பித்த முதல்வர் ஸ்டாலின்.. “6 பேர் விடுதலை” சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை! ஊட்டியில் இருந்தே வேலையை ஆரம்பித்த முதல்வர் ஸ்டாலின்.. “6 பேர் விடுதலை” சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை!

பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு தமிழகத்தில் ஆதரவு கிடைக்கவில்லை. தமிழகத்தில் 17% பேர்தான் பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 40% பேர் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் திருப்தி இல்லை எனவும் 40% பேர் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் திருப்தி தருவதாகவும் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிரதமராக அமோக ஆதரவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஐ.ஏ.என்.எஸ். சி வோட்டர் சர்வே தெரிவிக்கிறது. தமிழகத்தில் ராகுல் காந்தி பிரதமராக 54% பேரும் பிரதமராக மோடியே நீடிக்க 32% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

English summary

According to the IANS- C Voter Survey, 85% Tamilnadu voters satisfied with CM Stalin and DMK Govt.

Story first published: Sunday, May 22, 2022, 6:49 [IST]



Source link

Previous articleஉங்களுக்கு ஒன்னு எங்களுக்கு ஒன்னு! அடம்பிடிக்கும் ஓபிஎஸ்! விட்டு கொடுக்காத இபிஎஸ்! இழுபறியில் அதிமுக | AIADMK executives reportedly clasAIADMK executives reportedly clash over finalizing Rajya Sabha MP candidate list h over finalizing Rajya Sabha MP candidate list
Next articleஎங்களது இல்லத்திற்கு வந்த எங்களது பிள்ளை… பேரறிவாளன் குறித்து திமுக மூத்த தலைவர் ‘சுப்பு’ அக்கா! | Pearivalan meets DMK senior leader subbulakshmi jagadeesan