India

oi-Vigneshkumar

Google Oneindia Tamil News

காந்தி நகர்: காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய ஹர்திக் படேல் அக்கட்சியை மிக மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக வலுவாக உள்ள மாநிலங்களில் ஒன்று என்பதால், குஜராத்தைக் கைப்பற்ற பாஜக தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் குஜராத் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. அங்கு பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 “புதுச்சேரியிலும் அண்ணாமலை மாடல்” கண்ணைக் காட்டிய மேலிடம் - அச்சத்தில் அதிமுக, என்ஆர் காங்கிரஸ்! “புதுச்சேரியிலும் அண்ணாமலை மாடல்” கண்ணைக் காட்டிய மேலிடம் – அச்சத்தில் அதிமுக, என்ஆர் காங்கிரஸ்!

 ஹர்திக் படேல்

ஹர்திக் படேல்

இந்தச் சூழலில் ராத்தின் முக்கிய இளம் தலைவர்களில் ஒருவராக அறியப்பட்ட ஹர்திக் படேல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். 28 வயதான ஹர்திக் படேல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ளது அக்கட்சிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இது குறித்து சோனியா காந்திக்கு அவர் எழுதிய கடிதத்தில், நாட்டில் நிலவிய பல பிரச்சினைக்குக் காங்கிரஸ் முக்கிய காரணமாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டி இருந்தார். மேலும் ராகுல் காந்திக்கும் கட்சியின் மீது ஆர்வமில்லை என்று சாடி இருந்தார்.

 சாதி வெறி கட்சி

சாதி வெறி கட்சி

நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஹர்திக் படேல் இன்று அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “நாட்டிலேயே மிகப் பெரிய சாதிவெறி கட்சி காங்கிரஸ் தான். இங்குச் செயல் தலைவர் பதவி எல்லாம் வெறும் பெயரளவில் தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக எனக்குக் கட்சியில் எந்தவொரு முக்கிய பொறுப்பும் வழங்கப்படவில்லை” என்று சாடினார்.

 அடுத்து பாஜக

அடுத்து பாஜக

அடுத்து பாஜகவில் இணைவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த ஹர்திக் படேல், “இப்போது வரை பாஜகவில் இணைவது குறித்து எவ்வித முடிவும் எடுக்கவில்லை. நான் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக கூறிய போதே, படேல் சமூகத்தின் மூத்த தலைவர்கள் வேண்டாம் என்று என்னைத் தடுத்தனர். அவர்கள் பேச்சை மீறி நான் காங்கிரஸில் இணைந்தேன்.நான் செய்த தவற்றை இப்போது உணர்ந்துவிட்டேன்.

 அக்கறை இல்லை

அக்கறை இல்லை

ராகுல் காந்தியின் தாஹோத் ஆதிவாசி பேரணியில், சுமார் 25 ஆயிரம் பேர் மட்டுமே கலந்துகொண்டனர், ஆனால் 70 ஆயிரம் பேர் கலந்து கொண்டதாக பில் போடப்பட்டது. இந்த நிலையில் கூட காங்கிரஸ் கட்சியில் நிலவும் ஊழலுக்கு இதுவே ஒரு சாட்சி. ராகுல் காந்தி குஜராத் வந்த போது, ​​மாநிலத்தின் ஒரு பிரச்சனை கூட விவாதிக்கப்படவில்லை. ராகுல் காந்தி இங்கு வரும்போது அவருக்கு எந்த சிக்கன் சாண்ட்விச் கொடுக்கலாம், எந்த டயட் கோக் கொடுக்கலாம் என்று சான் காங்கிரஸ் தலைவர்கள் விவாதிக்கிறார்கள். இங்குச் சாதிய அரசியலைத் தவிர வேறு எதுவும் நடப்பதில்லை” என்று மிகக் கடுமையாகச் சாடி உள்ளார்.

 அடுத்து என்ன

அடுத்து என்ன

ஹர்திக் படேலின் ராஜினாமா கடிதத்தைப் பார்க்கும் போது, அவர் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது. இதற்கேற்றார் போல பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக அரசு, 2015-ல் ஹர்திக் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறும் நடவடிக்கையைத் தொடங்கி உள்ளது. அதேபோல ஆம் ஆத்மி கட்சிக்கும் குஜராத்தில் பிரபலமான தலைவர் தேவைப்படுகிறார். புதிய கட்சியைத் தொடங்குவதும் ஒரு ஆப்ஷனாகவே உள்ளது. அவர் என்ன முடிவை எடுக்கப்போகிறார் என்பது வரும் நாட்களில் தெரிய வரும்.

English summary

Former Gujarat Congress leader Hardik Patel slammed the state party and called it the biggest casteist party: (காங்கிரஸ் சாதியவாதி கட்சி என்று சாடும் ஹர்திக் படேல்) Hardik Patel slams congress party.

Story first published: Thursday, May 19, 2022, 15:20 [IST]Source link

Previous articleசூடு பிடிக்கும் சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கு.. யார் அந்த அரசியல்வாதி?.. ஹேமந்திற்கு இறுகும் பிடி | Police has a plan to reinvestigate Hemanth in Chithra’s death
Next articleகர்நாடகாவில் 10ம்வகுப்பு பாடத்தில் பெரியார் பற்றிய பகுதிகள் நீக்கம்.. இடம்பிடித்த ஆர்எஸ்எஸ் நிறுவனர் | In Karnataka, Text on periyar Removed from Class 10 social science book