Television

oi-Jeyalakshmi C

Google Oneindia Tamil News

சென்னை: டிவி சீரியலில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தாலும் “டாடி மம்மி வீட்டில் இல்லை” என்று செம குத்தாட்டம் போட்டுள்ளார் சந்திரலேகா சீரியல் நடிகை ஸ்வேதா. அதை விட புல்லட் பாட்டுக்கு அவர் ஆடிய சோலோ டான்ஸ் வேற லெவல் என்கின்றனர் ரசிகர்கள்.

சந்திரலேகா டிவி சீரியல் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 2200 எபிசோடுகளை தொட்டுள்ளது இந்த சீரியல். பிற்பகல் நேரத்தில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலை பார்த்து விட்டுதான் பல இல்லத்தரசிகளுக்கு சாப்பாடே இறங்குமாம்.

இறந்து போன மூளை.. 5 பேரை காப்பாற்றிய 6 வயது குழந்தை.. நாட்டை உலுக்கிய இறந்து போன மூளை.. 5 பேரை காப்பாற்றிய 6 வயது குழந்தை.. நாட்டை உலுக்கிய

சந்திரலேகா சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்வேதா பந்தேகர். இந்த தொடரில் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஸ்வேதா.

ஸ்வேதா சினிமா பயணம்

ஸ்வேதா சினிமா பயணம்

அஜித் குமார் நடிப்பில் வெளியான ஆழ்வார் படத்தில் அஜித் குமாரின் தங்கையாக நடித்திருந்தார் ஸ்வேதா.இந்த படத்தின் மூலம் சினிமா பயணத்தை தொடங்கினார். இதை தொடர்ந்து “வள்ளுவன் வாசுகி” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சந்திரலேகா டிவி சீரியல்

சந்திரலேகா டிவி சீரியல்

ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள ஸ்வேதா, விவேக் படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகள் என்ற சீரியல் மூலம் அறிமுகமான இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சந்திரலேகா சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 6 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

2000 எபிசோடுகள்

2000 எபிசோடுகள்

செய்தியாளராக போல்டான பெண்ணாக நடித்து இல்லத்தரசிகளின் மனங்களில் இடம் பிடித்தவர் ஸ்வேதா. பெற்றவர்களுக்கு பாசமான மகளாகவும்… புகுந்த வீட்டில் நல்ல மருமகளாகவும் நடித்து வரும் சந்திராவிற்கு ரசிகைகள் அதிகம். இப்போது சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 2000 எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகிறது.

டாடி மம்மி வீட்டில் இல்ல

டாடி மம்மி வீட்டில் இல்ல

சீரியலில் பிஸியாக இருந்தாலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான ஆடைகளில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் ஸ்வேதா. சமீபத்தில் சக நடிகையோடு இவர் ஆடியுள்ள டாடி மம்மி வீட்டில் இல்ல… பாடல் ஏராளமான லைக்ஸ்களை அள்ளியுள்ளது.

புல்லட் பாட்டுக்கு தனி டூயட்

புல்லட் பாட்டுக்கு தனி டூயட்

புல்லட் பாட்டுக்கு பல நடிகைகள் ஆடி ரீல்ஸ் போட்டிருந்தாலும் ஸ்வேதா தனியாக ஆடியுள்ள நடனம் வேற லெவல் என்கின்றனர் அவரது ரசிகர்கள். நடனம் மட்டுமல்ல அசத்தலான ஆடைகளில் மணப்பெண்ணாய் ஜொலிக்கும் போட்டோக்களையும் பதிவிட்டுள்ளார். சீரியலில் சீரியஸாக அழுது கொண்டே நடிக்கும் ஸ்வேதா இந்த போட்டோக்களில் அசத்தலாக இருக்கிறார் என பதிவிட்டுள்ளனர் அவரது ரசிகர்கள்.

English summary

ChandralekhaTV serial actress news: (சந்திரலேகா டிவி சீரியல் நடிகையின் ரீல்ஸ்) Despite being busy acting in a TV serial, Chandralekha serial actress Swetha has slammed “Daddy Mummy is not at home”. Fans say he has a different level of audio solo dance for the Bullet song than that.



Source link

Previous articleAnupama Parameswaran – The joy of draping saree is an art. Saree- @labelsouravdas Styling- @shilpagns …
Next articleஹைப்பர்லூப் தொழில்நுட்பம்! பிளைட் வேகத்தில் ரயிலிலேயே போகலாம்! சென்னை ஐஐடி உடன் இணையும் ரயில்வே துறை | IIT-Madras, Railways Collaborate To Develop Made-In-India Hyperloop System