Washington
oi-Vigneshkumar
வாஷிங்டன்: உலகின் பல்வேறு நாடுகளிலும் மங்கி பாக்ஸ் பரவ தொடங்கி உள்ள நிலையில், இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பே இப்போது தான் உலக நாடுகளில் மெல்லக் குறைந்து வருகிறது. வேக்சின் மற்றும் முன்னெச்சரிக்கை பணிகள் காரணமாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வருகிறது.
நாய் உணவை டேஸ்ட் பார்த்து சொன்னால் ரூ.5 லட்சம்.. சோறு போட்டு கை நிறைய சம்பளமும் கொடுக்கும் நிறுவனம்!
இதனால் இப்போது தான் உலக நாடுகள் கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு மெல்லத் திரும்பி வருகின்றன. இதற்கிடையே இப்போது புதியதொரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மங்கி பாக்ஸ்
மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை ஆப்பிரிக்காவைத் தாண்டி உலகெங்கும் உள்ள 15 நாடுகளில் பரவுள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இஸ்ரேல் என மொத்தம் 100 கேஸ்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும், இந்த பாதிப்பு பெரியளவில் பரவ வாய்ப்புகள் குறைவு என்றே கூறப்படுகிறது. பொதுவாக மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் இந்த மங்கிபாக்ஸ் மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது.

தனிமை கட்டாயம்
அதேபோல பாதிப்பு ஏற்படும் போது வழக்கமாக மிதமான பாதிப்பே ஏற்படும். இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படும் பலரும் சில வாரங்களில் குணமடைந்துவிடுவார்கள். இந்த வைரஸ் பாதிப்பு பல நாடுகளுக்குப் பரவ தொடங்கி உள்ளது ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் 3 வாரங்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியம் கட்டாய 3 வாரத் தனிமையை அறிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு
வரும் காலத்தில் இந்த பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் ஆய்வாளர்கள் இது குறித்து ஆலோசனை நடத்தினர். அதில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், “உலகின் அனைத்து நாடுகளும் சந்திக்கும் ஒரே பிரச்சினை கொரோனா வைரஸ் மட்டுமில்லை.

பல்வேறு நெருக்கடிகள்
இப்போது காங்கோ ரிபபளிக் நாட்டில் எபோலா பாதிப்பு,, மங்கி பாக்ஸ் மற்றும் அறியப்படாத ஹெபடைடிஸ் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும், ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, சோமாலியா, தெற்கு சூடான், சிரியா, உக்ரைன் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள சிக்கலான மனிதாபிமான நெருக்கடிகளைத் தீர்க்க உலக சுகாதார அமைப்பின் நிர்வாகிகள் உதவுகின்றனர்.

எளிதாகச் சமாளிக்கலாம்
காலநிலை மாற்றம், சமத்துவமின்மை மற்றும் புவிசார் அரசியல் போட்டி ஆகியவற்றால் ஏற்படும் நோய், வறட்சி, பஞ்சம் மற்றும் போர் ஆகியவற்றை வலிமையான ஒருங்கிணைப்பின் மூலம் நம்மால் எளிதாக எதிர்கொள்ள முடியும்” என்று அவர் தெரிவித்தார். மங்கி பாக்ஸ் நோய் 15 நாடுகளுக்குப் பரவியுள்ள நிலையில், இது அடுத்த பெருந்தொற்றாக பரவுமோ என்றும் பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
English summary
Tedros Adhanom Ghebreyesus warns about the monkeypox outbreak in 15 nations outside Africa: (மங்கி பாக்ஸ் பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை) Tedros Adhanom latest speech about problems faced by world.
Story first published: Monday, May 23, 2022, 11:18 [IST]