International
oi-Vigneshkumar
டோக்கியோ: ஜப்பானில் குவாட் மாநாடு நடைபெறும் நிலையில், ரஷ்யா மற்றும் சீன ராணுவ விமானங்களின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜப்பான் நாட்டில் குவாட் உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஜப்பானுக்குச் சென்றுள்ளனர்.
நாய் உணவை டேஸ்ட் பார்த்து சொன்னால் ரூ.5 லட்சம்.. சோறு போட்டு கை நிறைய சம்பளமும் கொடுக்கும் நிறுவனம்!
இந்த குவாட் மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் பைடனும் ஜப்பான் சென்றுள்ளார். முன்னதாக, நேற்றைய தினம் அமெரிக்க அதிபர் பைடன் ஜப்பான் பிரதமருடன் ஆலோசனை நடத்தினார்.

பைடன்
அப்போது பேசிய பைடன், சீனா பேராபத்திடம் விளையாடிக் கொண்டு இருக்கிறது என்று எச்சரித்தார். மேலும், தைவான் மீது சீனா படையெடுத்தால் தைவானுக்கு அமெரிக்கா ராணுவ உதவிகளைச் செய்யும் என்றும் உறுதி அளித்தார். அதாவது ரஷ்யாவைப் போலத் தைவான் மீது சீனா போரை ஆரம்பித்தால், தைவான் நாட்டை காப்பாற்ற ராணுவ உதவிகளைச் செய்யும் என்று பைடன் குறிப்பிட்டிருந்தார்.

சீனா தைவான்
தைவானைச் சீனா தனது நாட்டிற்குச் சொந்தமான பகுதி என்றே கூறி வரும் நிலையில், பைடனின் கருத்துகளைச் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்குச் சீனாவும் தக்க பதிலடி கொடுத்திருந்தது. தைவான் விவகாரம் என்பது சீனாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் சீனாவின் இறையாண்மை பிரச்சினைகளில், சீனா எவ்வித சமரசத்தையும் செய்து கொள்ளாது என்றும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசி இருந்தது.

போர் விமானங்கள்
இந்தச் சூழலில் ஜப்பானுக்கு மிக அருகே சீனா மற்றும் ரஷ்ய நாடுகள் போர் விமானங்களை இயக்கியதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் நோபுவோ கிஷி தெரிவித்துள்ளார். டோக்கியோவில் குவாட் நாடுகளின் தலைவர்கள் இருக்கும் நிலையில், சீனா-ரஷ்யாவின் இந்த செயல் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. சீனா-ரஷ்யாவின் இந்த செயலுக்கு ஜப்பான் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது.

பைட்டர் ஜெட்
ஜப்பான் வான்வெளிக்குள் விமானங்கள் நுழையவில்லை என்றாலும் கூட, மிக அருகே ராணுவ விமானங்களை இயக்கி உள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல் ரஷ்யா மற்றும் சீனா இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது நான்காவது முறையாகும். ரஷ்யா மற்றும் சீனாவுக்குச் சொந்தமான இரு குண்டுவீச்சு விமானங்கள் ஜப்பான் கடலில் இருந்து கிழக்கு சீனக் கடலுக்கு விமானங்களை இயக்கி உள்ளன.

அமைச்சர் நோபுவோ கிஷி
இது குறித்து ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் நோபுவோ கிஷி மேலும் கூறுகையில், “அதன் பிறகு நான்கு விமானங்கள் கிழக்கு சீனக் கடலில் இருந்து பசிபிக் பெருங்கடலை நோக்கி இயக்கப்பட்டன. அதேபோல ரஷ்ய உளவு விமானம் வடக்கு ஹொக்கைடோவிலிருந்து மத்திய ஜப்பானில் உள்ள நோட்டோ தீபகற்பத்திற்கு இயக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.

கவலையளிக்கிறது
இந்தச் சம்பவம் குறித்து தூதரக ரீதியாக ஜப்பான் தனது எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளது. உக்ரைன் போர் காரணமாக உலகின் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து ரஷ்யாவுக்கு எதிராக நிற்கிறது. இந்தச் சூழலில் அதே ரஷ்யா உடன் இணைந்து சீனாவின் இத்தகைய நடவடிக்கை கவலையளிக்கிறது. இதைச் சாதாரண நடவடிக்கையாக எடுத்துக்கொள்ள முடியாது” என்றார்

ஜப்பான்
ஜப்பானுக்கும் அதன் அண்டை நாடுகளான சீனா, ரஷ்யா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கும் சிறப்பான உறவைக் கொண்டிருக்கவில்லை. கடந்த ஆண்டு மட்டும் சுமார் 1,004 முறை அண்டை நாடுகளின் ராணுவ ஜெட் விமானங்கள் ஜப்பான் வான்வழிக்குள் நுழைந்துள்ளது. பெரும்பாலும் சீனாவின் விமானங்களே இப்படி அத்துமீறும். சீனாவுக்கு அடுத்து ரஷ்யா இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்.
English summary
Chinese and Russian fighter jets carried out joint flights near Japan: (ஜப்பான் வான்வழியில் பறந்த சீனா ரஷ்யா விமானங்கள்) China’s fighter jets near Japan air space.
Story first published: Tuesday, May 24, 2022, 18:58 [IST]