Delhi
oi-Rajkumar R
டெல்லி : தாஜ்மஹாலின் மூடிய அறைகள் குறித்த சர்ச்சை, உத்தரப்பிரதேச மாநிலம் ஞானவாபி மசூதி சர்ச்சையை தொடர்ந்து டெல்லியில் சாய்ந்த நிலையில் இருக்கும் குதுப்மினார் கட்டிடத்தை கட்டியது முகலாய மன்னர் குத்புதீன் ஐபக் இல்லை எனவும், அதனை உருவாக்கியது ராஜா விக்ரமாதித்யா என இந்திய தொல்லியல் துறை முன்னாள் அதிகாரி ஒருவர் கூறியிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் பாரம்பரிய சின்னங்கள் மசூதிகள் கோவில்கள் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக இஸ்லாமிய மன்னர்கள் கட்டிய பல்வேறு மசூதிகள் மற்றும் புராதான சின்னங்கள் கோயில்களாக இருந்தன என வலதுசாரி அமைப்புகளால் சர்ச்சை கிளப்பப்பட்டு வருகிறது.
ஆக்ராவில் இஸ்லாமிய மன்னர் ஷாஜஹான் கட்டிய உலக அதிசயமான தாஜ்மஹால், உத்தரபிரதேச மாநிலத்தில் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, மதுராவில் உள்ள சையத் ஈதுகா மசூதி, ஜும்மா மசூதி வரிசையில் மீண்டும் ஒரு புராதான சின்னத்திற்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தாஜ்மஹால் சர்ச்சை
முன்னதாக தாஜ்மஹால் குறித்து சர்ச்சை கிளப்பிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான தியாகு மாரி புராதன சின்னமான தாஜ்மஹால் நிறுவப்பட்டு நலம் தங்கள் குடும்பத்திற்கு சொந்தமானது என பகீர் புகார் கிளப்பினார். அந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது என்பதற்கான ஆவணம் கூட தன்னிடம் உள்ளது எனவும், ஜெய்ப்பூர் ராஜ வம்சத்தின் பதிவேடுகளில் அவை உள்ளன எனவும் கூறினார். மேலும் தாஜ்மஹாலில் ரகசிய அறைகளை இந்து கடவுள்களின் சிலைகள் உள்ளதாகவும் பரபரப்பு புகார் எழுந்தது.

ஞானவாபி மசூதி விவகாரம்
இதற்கு அடுத்ததாக உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஞானவாபி மசூதி குறித்த சர்ச்சை கிளப்பப்பட்டது. அதாவது அந்த மசூதி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சிவன் கோயிலாக இருந்ததாகவும், கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்ட நிலையில் இன்னும் அங்கு சிவலிங்கம் உள்ளதாக இணைய தளங்களில் பரபரப்பு புகைப்படங்கள் பரப்பப்பட்டன. இதையடுத்து சிலை இருக்கும் பகுதிக்கு சீல் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம் அங்கு தொழுகையை தொடரலாம் எனவும் உத்தரவிட்டது அந்த வரிசையில் பள்ளிகளில் நாம் படித்த குதிப்பினார் கோபுரம் தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

குதுப்மினார் கட்டிடம்
மத்திய அரசின் தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற தரம்வீர் சர்மா “குதுப்மினார் கோபுரம் டெல்லியின் சுல்தான்களில் ஒருவரான குத்புதீன் ஐபக்கால் கட்டப்பட்டது இல்லை என்றும், அது சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னதாக , அதாவது 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர் விக்ரமாதித்யாவால் கட்டப்பட்டது எனவும், சூரியன் இடம் மாறும் திசையை அறிய கட்டியதால் அதன் பெயர் சூரியக் கோபுரம் ஆகும் என கூறியுள்ளார்.

அதிர்ச்சி தகவல்
இந்த சூரியக் கோபுரம் செங்குத்தாக இல்லாமல் 25 அங்குலம் அளவில் சாய்ந்திருக்கும். இந்த சாய்வானது சூரியனின் திசையை அறிய அமைக்கப்பட்டது. ஜூன் 21 நாளில் அரை மணி நேரத்திற்கு அதன் நிழல் கீழே விழாது. அறிவியல் ரீதியாகக் கட்டப்பட்ட அந்தக் கோபுரம் ஒரு தொல்பொருள் சான்றாகும். அந்த கோபுரமானது ஒரு தனிக்கட்டிடமே தவிர அருகிலுள்ள மசூதியுடன் அதற்கு எந்த தொடர்பும் கிடையாது” எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள இந்துத்வா அமைப்புகள் போராட்டம் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர்.
English summary
The claim that the Qutb Minar building was not made by the Mughal emperor Qutb al Din Aibak and that it was created by Raja Vikramaditya, a former official of the Archaeological Survey of India, has once again caused a stir.
Story first published: Wednesday, May 18, 2022, 22:40 [IST]