International
oi-Noorul Ahamed Jahaber Ali
கான்பெரா: ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசனின் லிபரல் கட்சி குறைவான இடங்களில் வெற்றி தோல்வியை தழுவ, லிபரல் கட்சி வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்க உள்ளது
ஏராளமான இந்தியர்கள் வாழும் ஆஸ்திரேலியாவின் பிரதமர் இருந்துவந்த ஸ்காட் மோரிசன் தலைமையிலான லிபரல் கட்சி அரசின் 3 ஆண்டு பதவிகாலம் நிறைவடைந்தது.
இதனை தொடர்ந்து அந்நாட்டின் பிரதமரை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 21 ஆம் தேதி நடைபெற்றது.
விவேக் குமார் – இனி இவர்தான் பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளர்… என்ன அதிகாரம் தெரியுமா?

ஆண்டனி அல்பனீஸ்
கடந்த சில வாரங்களாக தீவிரமாக நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஆளும் லிபரல் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ஸ்காட் மோரிசன் மற்றும் தொழிலாளர் கட்சித் தலைவர் ஆண்டனி ஆல்பனீஸ் இடையே கடும் போட்டி நிலவியது. பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கு ஆண்டனி ஆல்பனீஸ் தேர்தலில் நெருக்கடி கொடுப்பார் என பேசப்பட்டு வந்தது. கருத்துக்கணிப்பு முடிவுகளும் ஆண்டனிக்கு சாதகமாகவே வந்தன.

வெற்றி நிலவரம்
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் மொத்தம் இருக்கும் 151 உறுப்பினர்களில் 76 உறுப்பினர்களை கொண்ட கட்சி ஆட்சியை பிடிக்கும். இதுவரை (மே 22 – 12:00am) நிலவரப்படி 151 இடங்களில் 132 இடங்களில் பதிவான வாக்குகள் முழுவதுமாக எண்ணப்பட்டுவிட்டன. இதில் 72 இடங்களில் தொழிலாளர் கட்சியும் 50 இடங்களில் ஆஸ்திரேலிய பிரதமரின் லிபரல் கட்சியும் வெற்றி பெற்று இருக்கின்றன.

ஆண்டன் ஆல்பனீஸ் வெற்றி உறுதி
ஆண்டனி ஆல்பனீசின் தொழிலாளர் கட்சியின் வெற்றி ஓரளவு உறுதியாகி இருக்கும் நிலையில், தேர்தல் முடிவுகள் முழுவதுமாக எண்ணப்பட்ட பிறகு அவர் அதிபராக பதவியேற்பது உறுதியாகும். இந்த நிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தனது தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி
நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள எதிர்க்கட்சித் தலைவரும் தொழிலாளர் கட்சித் தலைவருமான ஆண்டனி ஆல்பனீசுக்கு ஸ்காட் வாழ்த்து தெரிவித்து உள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் தேர்தலில் வெற்றியை உறுதி செய்துள்ள ஆண்டனி ஆல்பனீசுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் நன்றி தெரிவித்து இருக்கிறார். இந்திய – பசிபிக் பிராந்தியத்தில் இணைந்து பணிபுரியவும், ராஜாங்க ரீதியிலான உறவுகளை மேலும் பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

தோல்விக்கு காரணம்
8 ஆண்டுகள் 9 மாதங்கள் ஆஸ்திரேலியாவில் ஆட்சியிலிருந்த கன்சர்வேட்டிவ் கூட்டணியின் அதி தீவிர வலதுசாரி நடவடிக்கையும், கருப்பினத்தவர்கள், வெளிநாட்டவர்கள் மீதான தாக்குதலும், முதலாளிகளுக்கு ஆதரவான, பழங்குடியின மக்களுக்கு எதிரான செயல்பாடுகளும், பருவ நிலை மாற்றம் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததும் அதை தோல்வியடைய செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
English summary
Australian labour party chief Anthony Albanese defeats Scott Morrision in Australian elections:: ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசனின் லிபரல் கட்சி குறைவான இடங்களில் வெற்றி தோல்வியை தழுவ, லிபரல் கட்சி வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்க உள்ளது