Chennai
oi-Noorul Ahamed Jahaber Ali
சென்னை: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில் வடிவேலு மீம்ஸை பகிர்ந்து திமுக எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா கேலியாக பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே தினசரி பைசா கணக்கில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறது.
இந்த நிலையில் 4 மாதங்களாக எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருட்கள் விலையை உயர்த்தாமல் இருந்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 10 நாட்களாக மீண்டும் தொடர்ந்து விலையை உயர்த்தியது வாகன ஓட்டிகளை அவதியடைய செய்தது.
சேட்டன்களுக்கு 2வது லட்டு.. பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்த கேரளா, மத்திய அரசை அடுத்து நடவடிக்கை

பெட்ரோல், டீசல் விலை உயர்வு
137 நாட்களாக எந்த மாற்றமும் இன்றி நீடித்து வந்த இந்த விலை, கடந்த மார்ச் 22 ஆம் தேதி உயர்த்தப்பட்டது. அன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டன. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடும் எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்களை தொடர்ந்து ஒருமாதமாக விலையேற்றம் செய்யப்படவில்லை. கடந்த ஒரு மாதமாக சென்னையில் சென்னையில் ரூ.110.85க்கும், டீசல் ரூ.100.94க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கலால் வரி
இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரி குறைக்கப்படுவதாக அவர் அறிவித்து உள்ளார். பெட்ரோல் மீதான மத்திய கலால் வரி லிட்டருக்கு ரூ.8, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6 குறைக்கப்படுகிறது.

நிர்மலா சீதாராமன்
இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாநில அரசுகளும், குறிப்பாகக் கடந்த நவம்பர் 2021 வரி குறைக்கப்படாத மாநிலங்கள், இதேபோன்ற வரி குறைப்பை அமல்படுத்தி, சாமானிய மக்களின் சுமையைக் குறைக்க வலியுறுத்துவதாக நிர்மலா சீதாராமன் மாநில அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

மீம்ஸில் கலாய்த்த திமுக எம்.எல்.ஏ.
இந்த விலை குறைப்பை விமர்சித்து பாபு என்ற நபர் ட்விட்டரில் ஒரு மீமை பகிர்ந்திருந்தார். அதில், பெட்ரோல் விலை மார்ச் 1 ஆம் தேதி ரூ.95.45 ஆகவும் மே 1 ஆம் தேதி ரூ.105.41 ஆகவும் உள்ளது. மே 22 ஆம் தேதி ரூ.96.41 ஆக இந்த விலை குறைக்கப்பட்டதை குறிப்பிட்டு வடிவேலு குரளிவித்தை பார்க்கும் படம் அந்த மீமில் இணைக்கப்பட்டுள்ளது. “ஓ குரளி வித்தையா? என்ற தலைப்புடன் பகிரப்பட்ட மீமை, மன்னார்குடி திமுக எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா பகிர்ந்து “இவ்வளவு தான் சார் மேட்டர்; 10 ஏத்தி 9 கம்மி பன்றானுவோ” எனக் குறிப்பிட்டுள்ளார்.
English summary
Mannargudi DMK MLA TRB Raja shares shares Meme trolling Petrol, diesal price reduction: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில் வடிவேலு மீம்ஸை பகிர்ந்து திமுக எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா கேலியாக பதிவிட்டுள்ளார்.