சென்னை: தமிழக பாஜக இருக்கிறதா என்ற கேள்வி மூலம் தலைவர் அண்ணாமலையின் பதவிக்கு வேட்டு வைக்க துடிக்கும் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மாஜி ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு தமிழக பாஜக தலைவர் பதவியை பெற்று தர துடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொந்த காசில் சூனியம் என்பார்கள். அது போல் சொந்த கட்சி குறித்தே படுமோசமாக விமர்சிப்பவர் சுப்பிரமணியன் சுவாமி. பாஜக எம்பியாக இருந்தாலும் பிரதமர் மோடி, அமைச்சர்கள் என ஒருவரையும் விமர்சனம் செய்யாமல் விட்டுவைக்க மாட்டார்.
அப்படிப்பட்ட சுப்பிரமணியன் சுவாமி ஜனதா கட்சித் தலைவராக இருந்தார். அக்கட்சியை கடந்த 2013 ஆம் ஆண்டு பாஜகவுடன் இணைத்துவிட்டார்.