Trichirappalli
oi-Noorul Ahamed Jahaber Ali
திருச்சி: பேரறிவாளன் விடுதலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்தின்போது அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் தொண்டரை பார்த்து ஆவேசமாக சத்தமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 வருடமாக சிறையிலிருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. மேலும் பேரறிவாளன் விடுதலையை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்திருந்தது.
தமிழக காங்கிரஸ் தலைமை அறிவிப்பின் பேரில் மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணியை கட்டிக்கொண்டு அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜீவ்காந்தியை விட காங்கிரசுக்கு ஸ்டாலின் தான் முக்கியமோ! தமிழ் மாநில காங்கிரஸ் ஆவேசம்!

திருச்சியில் போராட்டம்
அதன் ஒரு பகுதியாக திருச்சி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான அருணாச்சலம் மன்றம் முன்பு திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ஜவஹர் தலைமையில் அறப்போராட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பேரறிவாளன் விடுதலையை கண்டித்து வெள்ளை துணியால் வாயை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மத்தின் வரம்புக்கு அப்பாற்பட்டது
இதனை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளருக்கு பேட்டியளித்தார். அதில், “பேரறிவாளன், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நிரபராதி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கவில்லை. உச்சநீதிமன்ற வரம்பிற்கு இந்த விடுதலை உட்பட்டதாக இருக்கலாம். தர்மத்தின் வரம்புக்கு அப்பாற்பட்டது.

தவறான முன்னுதாரணம்
கருணை அடிப்படையில் விடுதலை செய்தால் எதிர்காலத்தில் தவறான முன் உதாரணம் உண்டாகும். பல்வேறு வழக்குகளில் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சிறையில் உள்ளனர். கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்றால் எல்லா சிறைகளை திறந்து விட வேண்டியது தவிர வேறு வழிஇருக்காது.” என்றார்.

காங்கிரஸ் தொண்டர்
அவர் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென காங்கிரஸ் தொண்டர் சிக்கல்.சண்முகம் என்பவர் ஆவேசமாக “பேரறிவாளன் விடுதலை செய்ததை தொடர்ந்து மேளம் அடித்து கொண்டு கொண்டாடுகிறார். இது கண்டிக்கத்தக்கது என்று கூறி திடீரென அவேசமாக தெரிவித்தார். உடனே அந்த தொண்டரை அமைதியாக இருக்கும்படி திருநாவுக்கரசர் கூறினார்.

ஆவேசமான திருநாவுக்கரசர்
ஆனால் தொடர்ந்து அந்த தொண்டர் ஆவேசமாக பேரறிவாளனை ஒருமையில் திட்டிக்கொண்டு கூச்சிலிட்டபடியே இருந்தார். இதனால் கோபமடைந்த திருநாவுக்கரசர் அந்த தொண்டரை நோக்கி பாய்ந்தார். “ஏய்… பேட்டி கொடுக்குறேன், அப்றம் கத்துயா!” என ஆவேசமாக பேசினார். அதற்கு அந்த தொண்டர் நான் ராஜீவ் காந்தியின் உயிர் தொண்டன் எனக்கூறினார்

கொண்டாட்டம் தவறு
இதனை தொடர்ந்து பேசிய திருநாவுக்கரசர், “இதுபோல் சில தொண்டர்கள் கொதித்து எழுகிறார்கள். விடுதலையாகி வெளியே வந்த பிறகு
விடுதலை வரவேற்றாலும் அவர் விடுதலையானதை கொண்டாடுவது, திருவிழாவைப் போல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது கண்டனத்துக்குரியது.” என தெரிவித்தார்.
English summary
Congress MP Thirunavukkasar shouted on party worker in protest: பேரறிவாளன் விடுதலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்தின்போது அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் தொண்டரை பார்த்து ஆவேசமாக சத்தமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.