திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 12 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு குழந்தை பிறந்ததால் கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சங்கிலி குப்பம் கிராமத்தை சேர்ந்த 7 ஆம் வகுப்பு பள்ளி மாணவி. இவர் ஆம்பூரில் உள்ள தனியார் நிதி உதவி மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சீனி என்கிற சீனிவாசன் (வயது 20) என்பவர் மாணவியை ஆசை வார்த்தை கூறி பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.