Chennai

oi-Jeyalakshmi C

Google Oneindia Tamil News

சென்னை: திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். திராவிட மாடல் யாரையும் பிரிக்காது அரவணைக்கும் என்றும் முதல்வர் கூறியுள்ளார். இயற்கையின் ஆசி அரசுசுக்கு இருப்பதால்தான் முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டதாகவும் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு அதிக நீர்வரத்து உள்ளது. 24.05.2022 நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு 117.760 அடியாகவும் நீர் இருப்பு 89.942 டிஎம்சி அடியாகவும் உள்ளது. அதிக நீர்வரத்து தொடர்வதால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே. காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவை சாகுப்படிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் தண்ணீர் திறந்து விட்டார்.

I will keep my promises and work beyond my means says MK Stalin

சேலத்தில் நடைபெற்ற ஓராண்டு சாதனை நிறைவு விழாவில் பேசிய ஸ்டாலின் திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளோம். கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்தார். மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது தேர்தல் அறிக்கையில் கொடுக்காத வாக்குறுதி. இயற்கையே திமுக அரசுக்கு ஆசி வழங்கியுள்ளது.

ஆன்மீகத்தின் பெயரால் திமுக ஆட்சி மீது சிலர் குறை சொல்லத் தொடங்கியுள்ளனர். ஆட்சி மீது குறை சொல்வதற்கு ஏதுவும் இல்லாத காரணத்தால் ஆன்மீகத்தை கையில் எடுத்துள்ளனர். ஆன்மீகத்தின் பெயரால் ஆட்சி மீது அவதூறு பரப்புகின்றனர். எத்தனை விஷ பரப்புரை செய்தாலும் திமுக அரசை ஒன்றும் செய்ய முடியாது.

திராவிட மாடல் யாரையும் பிரிக்காது… அரவணைக்கும். திராவிட மாடல் எதையும் இடிக்காது ஒன்று சேர்க்கும் என்றும் கூறினார். இது ஒரு கட்சியின் ஆட்சி அல்ல இனத்தின் ஆட்சி என்றும் கூறினார். ஆட்சி என்பது அனைவருக்கும் பொதுவானது. இந்து சமய அறநிலையத்துறையையும் உள்ளடக்கியது என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை மக்கள் மறந்தாலும் நான் மறக்கமாட்டேன். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எனது சக்தியையும் மீறி நான் உழைப்பேன் இது அண்ணாவின் மீது ஆணை என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

English summary

CM Stalin Speech in Salem: (சேலத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு)I will work beyond my means for the people of Tamil Nadu. Chief Minister MK Stalin has said that he will keep all the promises he made.

Story first published: Tuesday, May 24, 2022, 17:05 [IST]



Source link

Previous article“மணி, வர்றீங்களா”.. கலைஞர் கூப்பிடுவார்.. அந்த போனுக்கு வாய் இருந்தால் அழுதுடும்.. அன்புமணி உருக்கம் | Very good worker and sincere leader, Anbumani ramadoss praises pmk gk mani
Next articleHappy yapppy faces My beautiful mustard outfit from @fiorebymalar_ @parthiv….