Astrology

oi-Jeyalakshmi C

Google Oneindia Tamil News

சென்னை:

சுபகிருது வருடம் வைகாசி மாதம் 5 ஆம் தேதி வியாழக்கிழமை 19.5.2022. இன்று அதிகாலை 03.24 மணி வரை திரிதியை திதி. பின்னர் சதுர்த்தி. இன்று காலை 09.34 மணி வரை மூலம். பின்னர் பூராடம். கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

புதிய பொறுப்புகள் வந்து சேரும். குழப்பமும் சந்தேகமும் இல்லாமல் திட்டமிட்டு செயல்படுங்கள். மறைமுகமாக மட்டம் தட்ட நினைப்பவர்களுக்கு நல்ல பாடம் கற்பிப்பார்கள். பாராட்டும் பதவியும் உங்களைத் தேடி வரும். பணி நிமித்தமாக வெளிநாடு செல்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெறுவீர்கள். நண்பர்களின் உதவி உண்டு.

ரிஷபம்

ரிஷபம்

கவனமாக நடக்காவிட்டால் கையிருப்பு கரைந்து போகும். பங்குப் பரிவர்த்தனையில் ஆழம் தெரியாமல் காலை விட வேண்டாம். எதையும் குறுக்கு வழியில் அடைய வேண்டும் என்று நினைக்காதீர்கள். நியாயம் உங்கள் பக்கம் இருந்தாலும் ஆறப்போட்டு அவசியமான வார்த்தைகளைப் பேசுங்கள். ஆன்லைன் வர்த்தகங்கள் சாதகமாக இருக்காது. சந்திராஷ்டமம் நாள். எதிலும் நிதானம் தேவை.

மிதுனம்

மிதுனம்

பழைய கடன்களைச் சுலபமாக பைசல் செய்வீர்கள். இளம் வயதினர் தன்னிச்சையாக முடிவு எடுக்காதீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும். சங்கடங்கள் மறைந்து தன்னம்பிக்கை உண்டாகும். தொழிலுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும். வியாபாரம் வெற்றிகரமாக நடக்கும். அரசுப் பணியில் பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். வேலை இடங்களில் பாராட்டப்படுவீர்கள்

கடகம்

கடகம்

சுணங்கிக் கிடந்த வீட்டு வேலைகள் நடக்கும். சுபகாரியத் தடைகள் நீங்கி சொந்தங்கள் கூடி வரும். ரத்த உறவுகள் இடையே உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் இனந்தெரியாத எதிர்ப்புகள் உருவாகும். தொழில் போட்டிகளை வெற்றிகரமாக முறியடிப்பீர்கள். அயல்நாட்டு வர்த்தகத்தில் சட்டப்படி நடந்து கொள்ளுங்கள். வீணான பிடிவாதத்தை ஒதுக்குங்கள்.

சிம்மம்

சிம்மம்

வேலை இடங்களில் இருந்த சிக்கல்கள் விலகும். பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவீர்கள். பிறரின் தனிப்பட்ட விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். ஆன்லைன் வர்த்தகத்தில் அளவோடு ஈடுபடுங்கள். போட்டி பந்தயங்களில் இருந்து விலகி இருங்கள். ஐடி ஊழியர்கள் அதிக எச்சரிக்கையுடன் பணியாற்றுங்கள். பிறரை நம்பி பத்திரங்களில் கையெழுத்திடாதீர்கள்.

கன்னி

கன்னி

இல்லத்தில் நல்ல காரியங்கள் நடக்கத் தொடங்கும். உண்மையான நட்புகள் உங்களுக்கு உதவி செய்வார்கள். வெளியூர்ப் பயணங்கள் தொழிலுக்குச் சாதகமாக அமையும். அரசுத்துறை சம்பந்தப்பட்டவர்களுக்கு அற்புதமான வாய்ப்பு உருவாகும். பணவரவு சீராக இருக்கும். பங்குப் பரிவர்த்தனைகள் நல்ல லாபம் தரும். சுப காரியங்கள் குறித்து குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது.

துலாம்

துலாம்

பணியிடத்தில் உங்கள் பொறுமைக்குப் பரிசாக உயர்வு வந்துசேரும். திட்டமிட்டு நேரம் தவறாமல் செயல்படுங்கள். பணத்தைக் கையாளும் போது கூடுதல் கவனத்தோடு இருங்கள். அலுவலக ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். மனையில் மகிழ்ச்சியும் குதூகலமும் நிலவும். விவாகப் பேச்சுக்கள் தடை நீங்கி கைகூடிவரும். வியாபாரம் சீராக நடக்கும். வெளியூர் பயணங்கள் வெற்றி தரும்.

விருச்சிகம்

விருச்சிகம்

தோல்வியில் துவண்டு இருந்த உங்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். இல்லத்தில் நிலவிய இறுக்கமான சூழ்நிலை விலகும்.தொழிலுக்குத் தேவையான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். சில்லரை வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவார்கள். கையிருப்புப் பணத்தை நிலத்தில் முதலீடு செய்வீர்கள்.

தனுசு

தனுசு

வங்கியில் எதிர்பார்த்த கடன் சம்பந்தப்பட்ட விவரங்கள் இழுபறியாக இருக்கும். தொழில் வரியை முறையாக செலுத்தி விடுங்கள். வேலை இடங்களில் வீண் விவாதங்கள் செய்ய வேண்டாம். வியாபாரம் சற்று மந்தமாகவே நடக்கும். குடும்பத்தினர் உங்களின் மனநிலையைப் புரிந்து நடந்து கொள்ள மாட்டார்கள். அலுப்பின்றி அரசுத்துறையில் பணியாற்ற வேண்டும். கடன் சுமை அதிகரிக்கும்.

மகரம்

மகரம்

சட்டத்திற்குப் புறம்பான நிலங்களை வாங்க வேண்டாம். பங்குச்சந்தை வியாபாரம் பாதகமாக இருக்கும். கொடுத்த கடனை திருப்பிக் கேட்டால் பகை வந்து சேரும். வேலை இடங்களில் நாணயமாக நடந்து கொள்ளுங்கள். ஆட்கள் பற்றாக்குறையால் கட்டிட வேலை தாமதமாக நடக்கும். கணினித் துறையில் கவனமாகப் பணியாற்ற வேண்டும். உறவினர்களால் தொல்லை உண்டாகும்.

கும்பம்

கும்பம்

பேச்சுவார்த்தை மூலமாக பெரிய சாதனை புரிவீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்கி பெண்களை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். படிப்பிற்காக பிள்ளைகளை வெளிநாடு அனுப்ப ஏற்பாடு செய்வீர்கள். பங்குச் சந்தை முதலீடுகள் லாபத்தைக் கொடுக்கும். வியாபாரத்திற்காக கேட்ட பணம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மறையும். எதையும் திட்டமிட்டு செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள்.

மீனம்

மீனம்

இரக்க சிந்தனையோடு ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வீர்கள். உறவுகளைப் பலப்படுத்த உற்சாகமாகப் பேசுவீர்கள். சகோதர சகோதரிகள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள். வெளியூர்ப் பயணங்களின் மூலம் தொழிலுக்குத் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். புதிய வீடு கட்ட திட்டமிடுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும்.

உங்கள் ஜோதிடர், கவிஞர்
அ.பெர்னாட்ஷா, காரைக்குடி.

English summary

Today’s Rasi Palan Thursday MAY 19 2022: Get your Daily Horoscope in tamil based on your zodiac signsSource link

Previous articleஜென்ம நட்சத்திர பலன்கள் – மே 19, 2022 வியாழக்கிழமை. | Today’s Janma Natchathira Palangal
Next articleஎனக்கு நீதி இல்லையா! நாங்கள் மனிதர் இல்லையா? ராஜீவ் குண்டுவெடிப்பில் காயமடைந்த பெண் அதிகாரி ஆவேசம்.! | ADSP Anusuya Ernest who was injured during the assassination of Rajiv Gandhi questions when we will get justice