Chennai

oi-Noorul Ahamed Jahaber Ali

Google Oneindia Tamil News

சென்னை: கோபாலபுரம் டி.ஏ.வி பள்ளியில் தனது தம்பி மகளுக்கே சீட் கிடைக்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டி.ஏ.வி. கல்விக்குழுமத்தின் பள்ளிக்கரணை பள்ளி தொடக்கவிழாவில் பங்கேற்று புதிய பள்ளியை திறந்து வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “1970 ஆம் ஆண்டு தொடங்கிய ஆரிய சமாஜ் கல்வி சங்கத்தின் சார்பில் சென்னையில் டி.ஏ.வி. பள்ளிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது.

கோபாலபுரம் என்பது நான் பிறந்து வளர்ந்த பகுதி. அந்த பகுதியில் முதல் பள்ளி 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 3 வது பள்ளியை சென்னை முகப்பேரில் 1989 ஆம் ஆண்டு அன்று முதலமைச்சராக இருந்த கருணாநிதி திறந்துவைத்தார்.

ஸ்டாலின் சப்போர்டுக்கு வந்த துரை வைகோ! அண்ணாமலை அரசியல் செய்கிறார் என்று ஆவேசம்ஸ்டாலின் சப்போர்டுக்கு வந்த துரை வைகோ! அண்ணாமலை அரசியல் செய்கிறார் என்று ஆவேசம்

சீட் கிடைக்கவில்லை

சீட் கிடைக்கவில்லை

இப்போது பள்ளிக்கரணையில் இந்த பள்ளியை நான் தொடங்கி வைக்க வந்திருக்கிறேன். ஆனால், டி.ஏ.வி. பள்ளியில் சீட் வாங்குவது கஷ்டம். எனக்கும் அனுபவம் உண்டு. என்னுடைய மகள் செந்தாமரையை கோபாலபுரம் டி.ஏ.வி. பள்ளியில்தான் சேர்த்தோம். அதை தொடர்ந்து என்னுடைய தம்பியின் மகள் பூங்குழலிக்கு டி.ஏ.வி. பள்ளியில் சீட் தர முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அந்த சமயத்தில் நாங்கள் ஆட்சிப்பொறுப்பிலும் இருந்தோம். அதற்கு பிறகு எப்படியோ கஷ்டப்பட்டு சீட் வாங்கிவிட்டோம்.

கல்வியின் குறிக்கோள்...

கல்வியின் குறிக்கோள்…

இதை எதற்காக சொல்கிறேன் என்றால், அவ்வளவு ஸ்ட்ரிக்டாக பள்ளியை நடத்துகிறார்கள். ஆகவே இந்த டி.ஏ.வி. பள்ளிக்கு வருகிறபோது இதற்கும் எனக்கும் இருக்கும் தொடர்பை சுட்டிக்காட்டவே இதை கூறினேனே தவிர இதை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. அதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி. தற்போது இந்த பள்ளிக்கரணை பள்ளியை தொடங்கி வைத்திருக்கிறேன் என்றால், அரசு பள்ளியாக இருந்தாலும், அரசு உதவி பெறும் பள்ளியாக இருந்தாலும் இதுபோன்ற கல்வி கண் திறக்கும் சாலைகளாக அமைந்து இருப்பதால் இவை மேன்மேலும் வளர வேண்டும். கல்வியின் குறிக்கோள் இருளில் இருந்து ஒளிக்கு கொண்டு செல்வதுதான்.

அசுரன் பட வசனம்

அசுரன் பட வசனம்

ஒரு மனிதனிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாத சொத்து கல்விதான். அத்தகைய சொத்தை உருவாக்கித் தரக்கூடிய கருவூலங்கள் கல்விச் சாலைகள். அரசின் சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை அமல்படுத்தி வருகிறோம். இதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்திருக்கிறோம். தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் வழங்கும் அரசாக இருக்கிறது. ஆன்மீகவாதியாக இருந்தாலும் மத சீர்திருத்தம் பேசியவர் தயானந்தர் அவர்கள். அவரது பெயரால் இந்த பள்ளி நடத்தப்படுகிறது. உருவ வழிபாட்டை நிராகரிக்கக்கூடியவராகவும் மத மோசடிகளை கண்டிப்பவராக அவர் இருந்துள்ளார். மகளிர் சம உரிமை, பெண் கல்வி தீண்டாமையை கடுமையாக எதிர்த்தார். குழந்தை திருமணத்தை கண்டித்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார்.

 தமிழில் பெயர் வைக்க அறிவுறுத்தல்

தமிழில் பெயர் வைக்க அறிவுறுத்தல்

மாணவ மாணவிகள் உண்மை, ஒழுக்கத்துடன் வளர வேண்டும். போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் தனித்திறமை, அறிவாற்றலில் கூர்மை, உண்மையும் நேர்மையும் இருந்தால் எளிதில் முன்னேற முடியும். அத்தகைய நோக்கத்தை வளர்ப்பதற்கு இதுபோன்ற கல்வி நிறுவனம் செயல்பட வேண்டும். இன்னொரு முக்கியமான வேண்டுகோளை வைப்பதை முக்கியமாக கருதுகிறேன்.

தாய்மொழி கல்விக்கு ஊக்கமளிப்பவையாக இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் இருக்க வேண்டும். உங்களின் திட்டங்களுக்கு தமிழில் பெயர் வைத்திடுங்கள். தாய்மொழிப்பற்றும் தாய்நாட்டுப் பற்றும் ஒவ்வொரு மனிதருக்கும் முக்கியம் என்பதால் இதை வேண்டுகோளாக வைக்கிறேன். இந்த கல்வி நிறுவனம் மேன்மேலும் வளர்த்து பல கல்வி சேவையை வழங்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.” என்றார்.

English summary

CM MK Stalin advices to choose tamil name for schemes in DAV new School opening: கோபாலபுரம் டி.ஏ.வி பள்ளியில் தனது தம்பி மகளுக்கே சீட் கிடைக்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, May 27, 2022, 14:09 [IST]Source link

Previous articleVarsha Bollamma – Nobody : Me: every time I look at a meme! #memes…
Next articleச்சா இப்படி பண்ணிட்டாரே.. இபிஎஸ் – ஓபிஎஸ் மூவ்.. அப்படியே அப்செட் ஆன “மலை”.. வெடிக்கும் ர.ரக்கள்! | Is all well with AIADMK seniors after the selection of Rajya Sabha candidates?