Chennai
oi-Hemavandhana
சென்னை: பேரறிவாளனை, முதல்வர் ஸ்டாலின் முதுகில் தட்டி கொடுத்த நொடியில் இருந்தே, தமிழக காங்கிரஸுக்கு தர்மசங்கடம் சூழ்ந்து கொண்டு விட்டது.
ஆயுள் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளனை, சுப்ரீம் கோர்ட் விடுவித்துள்ளது… இதையடுத்து, முதல்வர் ஸ்டாலினை பேரறிவாளன் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தித்து பேசினர்.
4 ஆண்டு விசாரணை… தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல்
அதேபோல, எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்தார்.. வைகோ உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் பேரறிவாளன் சந்தித்து வருகிறார்.

முதுகில் தட்டிய முதல்வர்
ஆனால், முதல்வர் ஸ்டாலினின் சந்திப்பின்போது, பேரறிவாளன் முதுகில் தட்டிக் கொடுத்துள்ளார் ஸ்டாலின்… இது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.. பேரறிவாளன் விடுதலையாலும் முதல்வர் ஸ்டாலின் அவரை அரவணைத்ததாலும் காங்கிரஸார் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸார் வாயில் துணியைக் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்… இதனால், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு மிகப்பெரிய சிக்கலையும் தர்மசங்கடத்தையும் இது ஏற்படுத்தி வருகிறது.

வாசன்
இந்த படத்தை ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த பகிர்ந்த நடிகை குஷ்பு, நறுக்கென ஒரு கேள்வி கேட்டிருந்தார். பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில், திமுக உடனான கூட்டணியை முறித்துக் கொள்ள காங்கிரஸ் தயாரா? முதுகெலும்பற்றவர்களின் செயலாகவே காங்கிரசின் நடவடிக்கை இருக்கிறது என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.. இப்போது ஜிகே வாசனின் தமாகாவும் இதே கேள்வியை கேட்டுள்ளது.. அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்..

மெரினா பீச்
அந்த அறிக்கையில், கடந்த 2011-ம் ஆண்டில் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக நான் இருந்தபோது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது… அதைக் கண்டித்து, ராஜீவ் காந்தியுடன் உயிர் நீத்த குடும்ப உறுப்பினர்களை அழைத்து சென்னை மெரினா காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அப்போது காவல் துறையினர் தடியடி நடத்தி எங்களை கைது செய்தனர்.

யுவராஜா
அன்று எங்களுக்கு இருந்த உணர்வுக்கூட இன்று காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களுக்கு இல்லை. காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைவிட ஸ்டாலின்தான் முக்கியம் போல தோன்றுகிறது என்று அறிக்கையில் யுவராஜா தெரிவித்துள்ளார்.. நாளுக்கு நாள் காங்கிரஸை பலரும் விமர்சித்து வருவதால், அக்கட்சி அப்செட்டில் உள்ளதாக தெரிகிறது.

கொள்கை வேறு
“கொள்கை வேறு.. கூட்டணி வேறு… எங்களது கொள்கைகளைப் பற்றி அவர்கள் ஏன் என்று கேட்கப்போவதில்லை. அவர்கள் கொள்கைகளைப் பற்றி நாங்கள் எதுவும் பேசுவதில்லை. யுத்தம் என ஒன்று வந்தால் பலர் இறக்கத்தான் செய்வார்கள் என்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா அறிவித்திருந்தார். பேரறிவாளன் ஒரு தமிழன் என்பதால், அவரை விடுதலை செய்ய வேண்டும் என சொல்கிறார்கள்.. ஒரு தமிழன் கொலைக் குற்றத்துக்கு உள்ளானால் அவரை விடுதலை செய்துவிடலாம் என்பது நியாயமா… இன்று நீதியும் செங்கோலும் கீழே சாய்ந்துவிட்டன என்பது என்னுடைய கருத்து” என்று ஏற்கனவே தெளிவாக கூறியிருந்தார்..

யார் கொலையாளி?
ஆனாலும், அழகிரிக்கு கேள்வி மேல் கேள்வி நாலாபக்கமிருந்தும் எழுந்து கொண்டிருக்கிறது.. கொள்கை, கூட்டணி என்று ஆயிரம் சொன்னாலும், “ராஜீவை கொன்றவர்கள் நிரபராதி என்றால், யார் கொலையாளிகள்? என்ற கேள்வி”யை சோஷியல் மீடியாவில் பலரும் எழுப்பி வருவதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்பதே நிஜம்..!
English summary
is rajiv gandhi important to you or stalin, asks tmc yuvaraja asks question to tamilnadu congress திமுக கூட்டணி காரணமாக கே எஸ் அழகிரிக்கு தர்மசங்கடங்கள் கூடி வருகிறது