International
oi-Nantha Kumar R
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் திருமணமான முதல் 3 நாள் புதுமணத்தம்பதி கழிவறை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் வினோத நம்பிக்கையை அந்த மக்கள் வைத்துள்ளனர்.
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் திருமண விழாக்களும், அதற்கு பின்பற்றும் சடங்குகளும் வெவ்வேறானவை. வித்தியாசமானவை.
உலகம் எத நோக்கி போகுதுனே தெரியலயே! 5 வயது சிறுமியை சிதைத்த 13 வயது சிறுவன்! அதென்ன டோலி இன்காபாக்ஸ்?
இந்நிலையில் தான் திருமணம் ஆன பிறகு 3 நாட்கள் புதுமணத்தம்பதி கழிவறை பயன்படுத்த கூடாது என்ற சம்பிரதாயம் காலம்காலமாக பின்பற்றப்படுகிறது என்றால் நம்ப முடிகிறது. நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் இது பல ஆண்டுகளாக இந்தோனேசியாவில் பின்பற்றப்பட்டு வருகிறது. யார் இவர்கள்? எதற்காக இவ்வாறு செய்கின்றனர்? என்பது பற்றிய முழுவிபரம் வருமாறு:

பழங்குடி மக்கள்
இந்தோனேசியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் போர்னியா என்ற இடம் உள்ளது. இந்தோனேசியா மற்றும் மலேசியா எல்லை அருகே உள்ள பகுதியில் பழங்குடி மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இவர்கள் திடாங் பழங்குடியினர் என அழைக்கப்பட்டு வருகின்றனர். இந்த பழங்குடி மக்கள் தான் திருமணம் முடிந்த பிறகு புதுமணத்தம்பதி 3 நாட்கள் கழிவறையை பயன்படுத்த கூடாது என்பதை சடங்காக பின்பற்றி வருகின்றனர்.

கண்காணிக்கும் குடும்பத்தினர்
மேலும் புதுமணத் தம்பதி கழிவறையை பயன்படுத்தாமல் தடுப்பதை கண்காணிக்கும் வகையில் குடும்ப உறுப்பினர் சிலர் காவலாளியாகவும் பணியாற்றுவது கூடுதல் வியப்பை ஏற்படுத்துகிறது. அதோடு இந்த 3 நாட்களும் புதுமணத்தம்பதிக்கு அதிகளவில் உணவுகள் வழங்கப்படுவது இல்லை. குறைவாகவும், குறிப்பிட்ட உணவுகளை மட்டுமே வழங்குகின்றனர்.

காரணம் என்ன?
திருமணம் ஆனபிறகு 3 நாளுக்குள் கழிவறை பயன்படுத்தினால் அது தம்பதிக்கு இடையே பிரச்சனையை ஏற்படுத்தும் என பழங்குடி மக்கள் நம்புகின்றனர். அதாவது திருமண முறிவு, ஒருவருக்கொருவர் துரோகம் செய்தல், வாரிசுகள் குறைந்த வயதில் உயிரிழத்தல், குடும்பத்தினர் இடையே புரிதல் குறைந்து தகராறு ஏற்படுதல் உள்ளிட்ட பிரச்சனைகள் சந்திக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் நம்புகின்றனர். இதனால் திருமணம் முடிந்த பிறகு புதுமணத் தம்பதியை கழிவறை வசதி இல்லாத அறையில் தான் வசிக்க செய்வார்களாம். இந்த 3 நாளில் உள்ள இந்த கட்டுப்பாட்டை அவர்கள் முறையாக கடைப்பிடித்தால் வாழ்வில் பிற சவால்களையும் அவர்கள் எளிதில் சமாளித்து வெற்றி பெறுவார்கள் என்பதையும் அவர்கள் நம்புகின்றனர்.

3 நாட்களுக்கு பிறகு என்ன?
இதனால் 3 நாட்களும் குடும்பத்தினர் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி தம்பதியின் நடவடிக்கையை கண்காணிக்கின்றனர். இந்த 3 நாட்கள் முடிந்த பின்னர் தம்பதியை கழிவறைக்கு அனுப்பி வைப்பார்கள். அதன்பிறகு குளிக்க வைத்து அவர்களுக்கு பிடித்த உணவுகள் வழங்கப்படுகிறது. அதன்பிறகு அவர்களுக்கு கட்டுப்பாடுகள் இருப்பது இல்லை.

திருமணத்துக்கு முன்பே தயார்
இந்த 3 நாள் நடைமுறையை பின்பற்றுவது என்பது சிரமம் என்றாலும் கூட அங்குள்ள பழங்குடியின மக்கள் திருமணத்துக்கு தயாராகும்போதே மனதளவிலும், உடலளவிலும் இந்த சவாலுக்கு தங்களை தயார்ப்படுத்தி கொண்டு வெற்றி பெற்று இல்லற வாழ்க்கையை துவங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English summary
In Indonesia, the newlyweds are banned from going to the toilet on the first 3 day of the wedding. Those people have a strange belief behind this.
Story first published: Sunday, May 22, 2022, 13:39 [IST]