பொள்ளாச்சி வல்லுறவு நடந்த போது அந்த பெண்கள் என்ன உடை அணிந்திருந்தார்கள். செய்தவர்கள் யார் (தமிழன்!) வக்கிரம் புடிச்சவங்கள்ல ஆம்பிளை, பொம்பிளை, சாதி, மதம், மொழி, தெக்கு, வடக்கு, இனம் வேறுபாடு இல்லை! எல்லாத்துக்கும் அடிப்படை சமூகமயமக்கல்! பொது புத்திய தூக்கி எறிந்து விட்டு வளரனும்.

உடைல பண்பாட்டை தேடிட்டு இருக்கானுங்க! வக்கிர புத்திக்கும் பெண்களையே குத்தம் சொல்றது! தமிழர் உடை போடுறதால ஒரு ஆண் உத்தமனாகிடுறானா? மண்டைல அழுக்க வச்சிக்கிட்டு வெளிய வெள்ளையும் சொள்ளையுமா திரியுறது! புடவைய போத்த்திட்டு திரியுறதில்ல பண்பாடு!

எதிர்ல ஒரு பொண்ணு அம்மணமாவே உக்காந்திருந்தாலும் அவ விருப்பிம் இல்லாம அவளைத் தொடக் கூடாது என சொல்லி வளர்ப்பதே சிறந்த பண்பாடு!

ஆம்பிளைன்னா அப்படிதான் இருப்பான்! நீ தான் மூடிட்டு போகனும் என்று சொல்லி வளர்ப்பதே ஆணாதிக்கம்! இதுல பெருமை வேற!

இதுல வேற பலாப்பழம்னா ஈ மொய்க்கதான் செய்யும்! முள்ளு மேல சேலை விழுந்தாலும், சேலை மேல முள்ளு விழுந்தாலும் சேலைக்கு தான் நட்டம்! அடேய்! மனுஷன நல்ல மனுஷனோட ஒப்பிடுங்க! ஆம்பிளைனா அப்படிதான் இருப்பான்னு சொல்றவன்/ சொல்றவள் தான் பெண்களுக்கு எதிரான அத்தனை கொடுமைகளுக்கும் பொறுப்பு.

Women have right to exist! Right to safety! Right to loiter! Right to late night roaming! Right to wear what they want! Right to be free.. as any other men! Stop oppressing women and paving way for Men to harass and exploit women in the name of Feminity!

Previous articleதனிமை யாருக்கு கடினமில்லை?! | எழுத்தாளர் கி ரா
Next articleஇன்று மதுரை மாவட்டத்தில் ஆங்காங்கே இடி மழைக்கு வாய்ப்புள்ளது.. கடந்த 24 மணி நேரத…