Hosur

oi-Noorul Ahamed Jahaber Ali

Google Oneindia Tamil News

ஓசூர்: மூன்று மாதத்திற்குள் பெட்ரோல் டீசல் விலைக் குறைப்பு குறித்த தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறை வேற்றவில்லை என்றால் சட்டமன்றம் முற்றுகையிடப்படும் என பாஜக மாநில துணை தலைவர் கே.பி.இராமலிங்கம் எச்சரித்துள்ளார்.

TN BJP vice president KP Ramalingam says they will surround TN assembly is Petrol, diesel price were not reduced

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாஜக மேற்கு மாவட்டம் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாஜக மாநில துணை தலைவரும் கோட்ட பொறுப்பாளருமான KP இராமலிங்கம் கலந்துக் கொண்டு ஆலோசனை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு மக்களின் மீதான அக்கறையின் காரணமாக பெட்ரோல் டீசல் விலையை ஏற்கனவே 4 ரூபாய் குறைத்து தற்போது 9 ரூபாய் 40 காசுகள் குறைத்துள்ளது.

நடிகர் டி ராஜேந்தர் திடீர் உடல்நலக் குறைவால் பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி.. தவிப்பில் ரசிகர்கள் நடிகர் டி ராஜேந்தர் திடீர் உடல்நலக் குறைவால் பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி.. தவிப்பில் ரசிகர்கள்

மேலும் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் தங்களின் மாநில வரிகளை குறைத்துள்ளன. இதனால் பெட்ரோல் டீசல் விலை அங்கு மேலும் குறைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் மாநில வரிகளை குறைக்க வில்லை. இதனால் உடனடியாக வரியினை குறைக்க வலியுறுத்தி 72 மணிநேர கெடு கொடுக்க பட்டது.

ஆனால் மாநில அரசு தேவையற்ற காரணங்களை கூறுகிறது. திமுக தேர்தலில் அளித்த பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்த வாக்குறுதிகளை மூன்று மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் சட்டமன்றம் முற்றுகை போராட்டம் மட்டுமின்றி ஆட்சியை அகற்றும் போராட்டமாக நடத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “72 மணி நேரத்துக்குள் தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் விலையை ரூ.5 குறைக்காவிட்டால் 72 மணி நேரத்துக்குள் கோட்டையை முற்றுகையிட்டு பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தும்.” என எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

English summary

TN BJP vice president KP Ramalingam says they will surround TN assembly is Petrol, diesel price were not reduced

Story first published: Monday, May 23, 2022, 22:11 [IST]



Source link

Previous articleTamil Palm Leaf manuscripts in Copenhagen, Denmark – THF History Documentary (டென்மார்க் தலைநகர் கோப்பன்ஹாகனில் பாதுகாக்கப்படும் ஓலைச்சுவடிகள்
Next articleசென்னை சேத்துப்பட்டு பக்கம் போறீங்களா?.. அப்ப “டைவர்ட்” ஆகாமல் இதை படிங்க பாஸ்! | Traffic Route diverted in Chetpet, Ashok Pillar and Poonamallee